குலுங்கி குலுங்கி.. அழுது சென்னை பீச்சில் ஓடிய பெண்.. பின்னாலயே ஓடிய மீனவர்.. கடைசியில பார்த்தால்?
சென்னை: உருகி உருகி காதலித்திருக்கிறது இந்த ஜோடி.. இப்ப ஒரு மரணம், ஒரு துயரம் அந்த குடும்பத்தை வாட்டி எடுத்து வருகிறது..!!
சென்னை எண்ணூர் ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 19 வயதாகிறது.. இவர் ஆட்டோ டிரைவர் வடிவேலு என்பவரை உயிருக்குயிராக விரும்பினார்.. வடிவேலுவும் ராஜேஸ்வரியை காதலித்து வந்துள்ளார். வடிவேலுக்கு 33 வயதாகிறது. இருவருமே கடந்த 6 மாதங்களுக்கு கல்யாணம் செய்துகொண்டனர்.
காதல் திருமணம்: கல்யாணம் ஆகி ஒரு நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கையில் திடீரென சிக்கல்கள் சூழ்ந்தன.. ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறுகள் வந்திருக்கின்றன. சம்பவத்தன்றும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது.

இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு, அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.. ஆனால், மகளை பார்த்ததுமே, அவரது அப்பா கோபமாகி உள்ளார்.. "கல்யாணமான 6 மாசத்திலேயே, இப்படி சண்டை போட்டுவிட்டு வந்து நிற்கிறியே?" என்று மகளை கண்டித்ததாக தெரிகிறது.. ஏற்கனவே நொந்துபோய் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி, அப்பாவும் தன்னை திட்டிவிட்டதால், மேலும் வேதனைப்பட்டுள்ளார்.. இதற்குமேல் எங்கு போவது? என்று தெரியாமல், தற்கொலை செய்து கொள்ளம் முடிவுக்கும் வந்துள்ளார்.
இளம்பெண்: இவர்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் இருப்பதால், அழுதுகொண்டே கடலுக்குள் சென்று குதித்துவிட்டார்.. இளம்பெண் ஓடிப்போய் கடலில் விழுவதை பார்த்ததுமே, அங்கிருந்த மீனவர்கள் பதறிப்போய் ஓடினார்கள்.. கடலுக்குள் குதித்து, உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.. பிறகு, வீட்டுக்கு தகவல் சொல்லி, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ராஜேஸ்வரியை அனுமதித்தனர்.
மிகவும் ஆபத்தான நிலைமையில் கொண்டு செல்லப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி இறந்துவிட்டார்.. இந்த விவகாரம் குறித்து எண்ணூர் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
நண்பர்கள்: இதனிடையே, ராஜேஸ்வரி இறந்துவிட்டதால், அவரது அண்ணன் ராஜேஷ், கடும் ஆவேசம் ஆகியுள்ளார். அதனால், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, மாப்பிள்ளை வடிவேல் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்..
"என் தங்கச்சி சாவுக்கு நீ தான் காரணம்" என்று சொல்லி கத்தியாலேயே வடிவேலுவின் தலையில் வெட்டியிருக்கிறார்.. மேலும், வடிவேலுவின் கை, கால்களையும் அடித்து உடைத்துள்ளார்.. இதில், வடிவேலுவின் இடது கையை உடைந்துவிட்டது.. குத்துயிலும் குலையுயிருமாக அலறி கீழே விழுந்தார் வடிவேலு..
சீரியஸ்: அந்த அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஏற்கனவே ராஜேஸ்வரியின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை நடந்துவரும்நிலையில், தப்பியோடிய ராஜேஷையும், அவரது நண்பர்களையும் தேடி வருகிறார்கள். இப்போது மருத்துவமனையில் ஐசியுவில் சீரியஸாக இருக்கிறாராம் ராஜேஷ்.. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications