சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு 3வது நாளாக நல்ல செய்தி.. மெகா தடுப்பூசி முகாம்களால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 3வது நாளாக நேற்றும் யாருமே இறக்கவில்லை. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 13 பேர் நேற்று பலியாகினர்.

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மாநிலம் முழுவதும் நேற்று மாலை நிலவரப்படி மேலும் 1,303 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பபட்டுள்ளனர். ஒரே நாளில் 13 பேர் இறந்துள்ளனர். 1,428 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 15,992 பேர் கொரோனா பாதிப்புடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

திங்களன்று, தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக, சென்னையில் கொரோனா காரணமாக எந்த இறப்பும் இல்லை. சென்னை மட்டுமின்றி 27 மாவட்டங்களில் நேற்று இறப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அறிவிதுள்ளது. , மாநிலம் முழுவதும் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுநோயால் இறந்ததால், உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 35,796 ஆக உயர்ந்துள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு; மின் வெட்டு ஏற்படும் சூழல்; மத்திய அரசு பொறுப்பின்றி இருக்கிறது -வேல்முருகன் நிலக்கரி தட்டுப்பாடு; மின் வெட்டு ஏற்படும் சூழல்; மத்திய அரசு பொறுப்பின்றி இருக்கிறது -வேல்முருகன்

தமிழக கொரோனா

தமிழக கொரோனா

புதிதாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து தமிழகத்தில் குறைந்து வருகிறது. நேற்று 1,303 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 168 பேரும், கோயம்புத்தூரில் 128 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்க பாதிப்பு

எங்க பாதிப்பு

செங்கல்பட்டில் 98 பேரும், திருப்பூரில் 87 பேரும், ஈரோட்டில், 75 பேரும், தஞ்சாவூரில் 60 பேரும், திருவள்ளூரில் 58 பேரும், நாமக்கலில் 57 பேரும், சேலத்தில் 52 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் தலா 10 க்கும் குறைவான கேஸ்களே நேற்று காணப்பட்டன. பெரம்பலூரில் மிக குறைவாக இரண்டு கேஸ்களே பதிவாகின.

எங்கு ஏற்பட்டது

எங்கு ஏற்பட்டது

கோயம்புத்தூரில் நான்கு பேரும் செங்கல்பட்டு, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவாரூர் மற்றும் திருச்சியில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் கொரோனா தொற்றால் நேற்று மரணம் அடைந்தனர். உயிரிழந்த 13 பேருக்கும் ஏற்கனவே பல்வேறு பாதிப்புகள் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணம் அடைந்தவர்கள்

குணம் அடைந்தவர்கள்

ஒரே நாளில் 1,428 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். இதனால் சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 26,27,780 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மாநிலத்தில் 16,000 க்கும் கீழே விழுந்தது - தற்போது, 15,992 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிபட்சமாக சென்னையில் 1,856 பேரும், கோவையில் 1,605 பேரும், செங்கல்பட்டில் 1,139 பேரும் உள்ளனர்.

திருப்பூர் அதிகம்

திருப்பூர் அதிகம்

ஞாயிற்றுக்கிழமை தரவுகளின்படி, மாநிலத்தின் நேர்மறை விகிதம் 0.9%ஆக இருந்தது. திருப்பூரில் 2%அதிக நேர்மறை விகிதம் உள்ளது. நேற்று தமிழகத்திதல் COVID-19 க்கு 1,39,836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 4,86,03,749 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி முகாம்கள்

தடுப்பூசி முகாம்கள்

கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் தடுப்பூசி அதிக தடுப்பூசி போட்ட மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் அதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு, தற்போது 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் 5 கோடியே 21லட்சத்து 93 ஆயிரத்து 732 பேர் 11ம் தேதி நிலவரப்படி தடுப்பூசி போட்டுள்ளனர் என்று புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 கோடியுடன் முதல் இடத்தில் உத்தரப்பிரதே மாநிலம் உள்ளது. 8.85 கோடியுடன் மகாராஷ்டிரா 2வது இடத்தில் உள்ளது. தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் செலுத்துவது என்பது மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் என்பது நாம் அறிய வேண்டிய முக்கிய தகவல் ஆகும்.

விஜய் ஆனந்த்

விஜய் ஆனந்த்

மெகா தடுப்பூசி முகாம்கள் காரணமாக தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவது ஒரு நேர்மறையான அறிகுறி என்று கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். ஒரு புதிய மாறுபாடு (VOC) எழும் வரை நாம் அதிலிருந்து விரைவில் வெளியே வர வேண்டும். புதிய கொரோனா வேரியண்ட் உருவாகும் முன்பு கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி தடுப்பூசி போடுவது நமக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.

English summary
No one died on the 3rd day yesterday due to corona infection in Chennai. Meanwhile, 13 people died due to corona infection in Tamil Nadu yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X