அண்ணாநகர் ரவுண்டானாவில் இளம் பெண்ணை.. ரவுண்டு கட்டி தாக்கிய மாணவி.. காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க
சென்னை: சென்னை அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் இளம் பெண் ஒருவரை மாணவி ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதியாகும் இது,
இங்கு இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பொதுவாக கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருவது வழக்கம்.

சென்னை
இந்த நிலையில் நேற்று இந்த பேருந்து நிலையத்தில் மாணவி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, அவரிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி இருக்கிறார். சுற்றி பொது மக்கள் பலர் இதை பார்த்துக்கொண்டு இருந்தனர். இரண்டு மாணவிகளும் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்ததால் அங்கு கூட்டம் கூடியது.

மாணவிகள் சண்டை
அதிலும் மாணவிகள் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி மாறி மாறி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாய் தகராறு சண்டையில் முடிந்தது. ஒரு மாணவியின் தலைமுடியை இன்னொரு மாணவி பிடித்து இழுத்து அடித்தார். பதிலுக்கு இந்த மாணவியும் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து.. தரையில் தள்ளி தாக்கினார். அங்கிருந்த சக மாணவிகள் சிலர் இதை தடுக்க முயன்றனர்.

என்ன காரணம்?
ஆனால் யார் சமாதானப்படுத்தியும் நிற்காமல் இரண்டு மாணவிகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியாமல் அங்கிருந்த மக்கள் குழம்பி போய் இருந்தனர். அப்போதுதான் ஒரு மாணவி, ஏன்டி என் லவ்வர் கூட பேசுற என்று கேட்டு இன்னொரு மாணவியை தாக்கினார். சக மாணவர் ஒருவருக்காக இரண்டு மாணவிகளும் அடித்துக்கொண்டது தெரிய வந்தது.

வீடியோ
இரண்டு மாணவிகளும் ஒரே ஆணை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடி இருந்த சில மாணவிகள் சேர்ந்து சண்டை போட்ட இரண்டு மாணவிகளையும் பிரித்து வைத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனாலும் இரண்டு மாணவிகளும் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications