மாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்த பின், தத்துவ இயல் துறையில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் சேர்ந்த கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவில், உரிய கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், விதிகளை மீறியதால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என துணைவேந்தர் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக விதிகள் எதையும் மீறாத நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, அன்றைய தினம் விசாரணையை தள்ளிவைத்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications