Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்கா: மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து- ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்ததாக 21 திமுக எம்எல்ஏக்கள் மீதான சட்டசபை உரிமை குழு நோட்டீஸின் ஒருபகுதியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் குட்கா பொருட்களை காட்டி அரசுக் எதிராக குற்றச்சாட்டை வைத்தார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

முதல்வர்

முதல்வர்

சட்டசபை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ

திமுக எம்எல்ஏ

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வாதங்கள் நடைபெற்றது.

11 எம்எல்ஏ

11 எம்எல்ஏ

இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் N R இளங்கோ ஆஜராகி வாதிடுகையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ'க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை 2017 பிப்ரவரி 18ம் தேதியே 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்காத நிலையில் தற்போதும் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு.

பெரும்பான்மை

பெரும்பான்மை

சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பியதாகவும், மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை எனவும் வாதிடப்பட்டது. 2017 மார்ச் முதல் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், 2017 பிப்ரவரி 18ம் தேதியே 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் தற்போதும் பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு எனவும் வாதிடப்பட்டது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பியதாகவும், மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை எனவும் வாதிடப்பட்டது. 2017 மார்ச் முதல் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், 2017 பிப்ரவரி 18ம் தேதியே 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் தற்போதும் பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு எனவும் வாதிடப்பட்டது.

சட்டப்பேரவை உரிமை மீறல்

சட்டப்பேரவை உரிமை மீறல்

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ஏ பி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு சட்டப்பேரவை உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் புதிய நோட்டீஸை அனுப்ப உத்தரவிடுகிறோம். அப்படி அனுப்பும் நோட்டீஸில் மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முன் வைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+