தோழி விடுதிக்கு எதிரான வழக்கு.. ரூ.10,000 அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் தோழி விடுதி கட்ட தடை கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை ரூ.10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதிகளை அமைத்து வருகிறது. இந்நிலையில், தோழி விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி எம்.ஏ. படிக்கும் மாணவர் நவீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

வேலை மற்றும் கல்விக்காக நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறப்பான தங்குமிடங்களை வழங்கும் நோக்கில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் தோழி மகளிர் தங்கும் விடுதிகள் திட்டம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில், நவீன வசதிகளுடன் கூடிய தோழி தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி என 9 நகரங்களில் இந்த விடுதிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
தனியாரால் நடத்தப்படும் விடுதிகளுடன் ஒப்பிடும்போது, இங்கு கட்டணம் குறைவாகவும், பாதுகாப்பு அதிகமாகவும் இருப்பதால், பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் இந்தத் திட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, மாநிலம் முழுவதும் புதிதாக 26 இடங்களில் தோழி விடுதிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக 26 விடுதிகள் பயன்பாட்டிற்கு வரும்போது, மாநிலம் முழுவதும் உள்ள பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் குறைந்த செலவில், அதிக பாதுகாப்புடன் தங்குவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தான் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் தோழி விடுதி கட்ட தடை கோரி எம்.ஏ. படிக்கும் மாணவர் நவீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரூ.10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications