ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு.. கொடநாடு வழக்கில் தனபாலுக்கு எதிராக எடப்பாடி வழக்கு தொடர ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் கடந்த 16ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்சியுள்ளார்.
கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மனு மீது நீதிபதி மஞ்சுளா இன்றைய தினம் விசாரணை நடத்தினார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளித்தார்.
பின்னணி என்ன: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக கொடநாடு எஸ்டேட் உள்ளது. சென்னையில் கோடை காலத்தின் போது ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சென்று ஓய்வெடுப்பார். இது மினி தலைமைச் செயலகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கார் ஓட்டுநரான கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில் நிறைய மர்மமான சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கில் சில ஆவணங்கள் அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியாக இருக்கிறார். இவர் ஜாமீனில் வெளியே வந்துதான் கொடநாடு வழக்கு குறித்து பேசி வருகிறார். இதற்கு தடை விதிக்கத்தான் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications