"மொத்தம் 200+ இடங்கள்.." சென்னை முழுக்க பெரிய ஆபத்து.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்! என்ன மேட்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள சாலைள் குறித்து அறப்போர் இயக்கம் முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள 200+ பகுதிகளில் ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பாதாளச் சாக்கடைக்கான மூடிகள் சரியான நிலையில் இல்லை என்றும் இது வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது. விரைவில் பருவமழை காலமும் சென்னையில் தொடங்கும் சூழலில், நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாட்டிலேயே அதிக மக்கள் தொகை நெருக்கடி கொண்ட நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. இதனால் அங்கே டிராபிக் நெரிசலும் மிக அதிகமாகவே இருக்கிறது.

சென்னையில் உள்ள டிராபிக் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்தளவுக்கு டிராபிக் இருக்கும் நகரில் சாலைகள் அதற்கேற்ப இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. அதேநேரம் இங்குச் சாலைகளின் தரம் மிக மோசமாக இருப்பதாக நீண்ட காலமாகவே விமர்சனங்கள் உள்ளன. இதற்கிடையே சென்னையில் உள்ள சாலைகள் குறித்து அறப்போர் இயக்கம் முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
200+ ஆபத்தான இடங்கள்: அதாவது தலைநகர் சென்னையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை முழுக்க 467 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 1000 தன்னார்வலர்கள் நடத்திய இந்த ஆய்வில் ஐயப்பந்தாங்கல், அகரம்தென் மற்றும் திருநீர்மலை உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்பீட் பிரேக்கர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சர்வே நடத்தப்பட்ட இடங்களைத் தாண்டியும் பல்வேறு இடங்களில் இதே பிரச்சினை தான் என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர். இது தவிரச் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 205 இடங்களில் பாதாளச் சாக்கடைக்கான பள்ளங்கள் சாலை மட்டத்திற்கு இணையாக இல்லை. இது IRC 98-2011 விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. இதனால் சாலைகளில் செல்வோருக்குக் குறிப்பாக டூவீலரில் செல்வோருக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன் இந்த விவகாரத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேயர் பிரியா: மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை மேயர் பிரியாவும் விளக்கமளித்துள்ளார். அதாவது சென்னையில் இப்போது மெட்ரோ பணிகள், மெட்ரோ வாட்டர் பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருவதாலேயே சாலைகளும் பாதாளச் சாக்கடை மூடிகளும் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைச் சரி செய்ய உடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யவும் புதிய சாலைகளை அமைக்கவும் ரூ. 228 கோடிக்கு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சாலையின் உயரத்திற்கு ஏற்ப மேன்ஹோல்கள் மற்றும் நடைபாதைகளை அமைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications