மாறவே இல்லை! உச்சத்தில் தக்காளி விலை.. கோயம்பேடு மார்க்கெட் இன்றைய காய்கறி விலை பட்டியல்! விபரம்
சென்னை: சென்னையில் குறைந்து வந்த தக்காளி விலை தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று தக்காளியின் விலை நேற்றைய தினத்தைபோல் உச்சத்தில் தொடர்கிறது. மேலும் பிற காய்கறிகளின் விலை நிலவரமும் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு கூட விற்பனையானது. தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட பல இடங்களில் தக்காளி விலை என்பது கிலோ ரூ.150யை கடந்து விற்பனையானது.

இதனால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தன. தமிழகத்தை பொறுத்தவரை அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடங்கப்பட்டது. அதேபோல் மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் நேரடியாகவும், வாகனங்களிலும் சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ஓரளவு குறைந்து வந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்து விற்பனையான நிலையில் படிப்படியாக விலை குறைந்து ரூ.70 வரை இறங்கி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே தான் தற்போது மீண்டும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை என்பது படிப்படியாக உயர்ந்து உச்சமடைந்து வருகிறது. அதன்படி ரூ.70 வரை குறைந்த தக்காளி விலை ரூ.80, ரூ.100, ரூ.120யை கடந்து நேற்று ரூ.140க்கு விற்பனையானது. இத்தகைய சூழலில் தான் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலையில் மாற்றமில்லை. நேற்றைய தினத்தை போல் ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ.120க்கும், வெங்காயம் ரூ.22க்கும் விற்கப்பட்டு வருகிறது மேலும் ஒரு கிலோ இஞ்சி ரூ.250க்கும், பூண்டு ரூ.220க்கும், பட்டாணி ரூ.200க்கும், வண்ண குடமிளகாய் ரூ.180க்கும் விற்பனையாகிறது.
இதுதவிர பீன்ஸ் ரூ.90க்கும், பச்சை மிளகாய், பச்சை குடைமிளகாய் தலா ரூ.70க்கும், வாழைத்தண்டு ரூ.60க்கும், காராமணி, ஊட்டி கேரட் தலா ரூ.50க்கும், மாங்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.40க்கும், வரி கத்தரி ரூ.35க்கும், காலிபிளவர் ரூ.30க்கும், தேங்காய் ரூ.20 க்கும், ஊட்டி பீட்ரூட் கிலா ரூ.40க்கும், கர்நாடகா பீட்ரூட் ரூ.25க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும், முள்ளங்கி ரூ.15க்கும் விற்பனையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications