ரேஷனில் பொங்கல் கிப்ட் விடுங்க.. வடசென்னையை பாருங்க.. திடீர்னு வந்த போலீஸ்.. தமிழக அரசு அடுத்த மாஸ்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், வடசென்னையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. என்னாச்சு திடீர்னு?
மாஞ்சா நூல் பட்டம் விடக்கூடாது என்று 2015-லேயே தடைச்சட்டம் சென்னையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர்.

கட்டுப்பாடுகள்: அதற்கேற்றவாறு, மாஞ்சாநூல் பட்டமும் ஓரளவு கட்டுப்பட்டுதான் காணப்பட்டது. ஆனால், 3 வருடங்களுக்கு பிறகு திடீரென திரும்பவும் முளைத்துவிட்டது, சென்னைவாசிகளை அதிர்ச்சி நிறைந்த கவலையில் ஆழ்த்தியது.
பைக்கில் தகப்பனுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையின் கழுத்தில், எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா நூல் மாட்டிக்கொண்டுவிட்டது.. இதில், கழுத்து அறுபட்டு அந்த குழந்தை இறந்தே போனான்... சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் அதிகரித்தபடியே இருந்தது.. பலரும் காயமடைந்தனர்... இந்த மாஞ்சா நூலுக்கு பறவைகளும், விலங்குகளும் கூட தப்பவில்லை.
சேமிப்பு: இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல், பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்துவைக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது... இதற்கு பிறகே, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவது கணிசமாக குறைந்தது...
பிறகு, கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக அரசாணையே வெளியிடப்பட்டது.. ''நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு முழுமையான தடை விதித்தது.
விற்பனை அமோகம்: அதுமட்டுமல்ல, வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு, ராயபுரம் பகுதி ஆட்டுத்தொட்டி, புது வண்ணாரப்பேட்டை பகுதி கிராஸ் ரோடு, கொருக்குப் பேட்டை போன்ற பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக இருந்து வந்த நிலையில், இந்த இடங்களை தற்போது போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது, சீன மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானதாக உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த நூல் கண்ணுக்கு தெரியாது.. ஆனால், ஒருவரின் உடலையே கிழித்து கொன்றுவிடும் அளவுக்கு திறன் உடையதாம்.. இதுபோன்ற மாஞ்சா நூலையும் மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.. ஆனாலும், சிலர் தடையை மீறி அதனை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது..
சீன மாஞ்சா நூல்: இந்த சீன மாஞ்சா நூலுக்கு குஜராத், டெல்லி, மராட்டியம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, சண்டிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நிரந்தர தடை உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தடை போடப்பட்டது.
இப்போது பொங்கல் பண்டிகை என்பதால், காற்றாடி விடும் போட்டிக்காக வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் கடை மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறதா என்று உளவுத்துறையும், போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.. யாரெல்லாம் மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபடுகிறார்களோ, அவர்களது விபரங்களை சேகரித்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.
புகார் எண்: ஒருவேளை, மாஞ்சா நூல் பட்டு காயம் அடைந்த பறவைகள் குறித்து அவசர தேவைக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை 98201 22602 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications