சென்னைக்கு மற்றுமொரு மணி மகுடம்..மெரினா டூ பெசண்ட் நகருக்கு பறக்கலாம்! மேயர் பிரியா சொன்ன குட்நியூஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாகவே ஆய்வு அளவிலேயே இருக்கிறது. இந்த திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சென்னை மெரீனா ரோப் கார் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி வருவதாக மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார் மேயர் பிரியா.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. நாள்தோறும் அந்த கடற்கரையில் நடைப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். மேலும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.
மாலை நேரங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்கள் காணும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் தலைவர்களின் நினைவிடங்களும் அமைந்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் திண்டுக்கல்லில் பழனி முருகன் கோவிலில் உள்ள ரோப் கார் சேவை போல பெசன்ட் நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.
இதை அடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு கடந்தாண்டு டெண்டர் கோரியது. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ஆலோசனை, விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றையும் மாநகராட்சி பெற்றது.
இந்த நிலையில் அதற்குப் பிறகு மெரினா ரோப் கார் திட்டம் தொடர்பாக எந்த விதமான நகர்வுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று சென்னை மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது 14வது வார்டு திமுக கவுன்சிலர் செம்மொழி சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ப்ரியா, சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்திற்கான சாத்திய கூறு குறித்த அறிக்கை தயாராகி வருவதாகவும், முழுமையான அறிக்கை கிடைத்ததும் ரோப் கார் திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். இதன் மூலம் சென்னை ரோப் கார் திட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டு அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications