மேயர் பிரியாவை பார்த்தீங்களா.. ஒரு செகண்ட்கூட யோசிக்கலயே.. திமுக தனசேகரன் வீசிய வெடி.. கலங்கும் அதிமுக
சென்னை: அதிமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தூக்கி போட்டுள்ளார் திமுகவின் தனசேகரன்.. சென்னை மேயர் பிரியாவின் அடுத்த அதிரடியால், அதிமுக தரப்பு கலங்கி போயுள்ளதாம்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்த கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன், சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார்

தனசேகரன்: அப்போது தனசேகரன் பேசியபோது, "கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து வரி ஏய்ப்பு நடந்தது தொடர்பாக கணக்கு மற்றும் நிலை குழுவிற்கு பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், சென்னையில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு குறித்து பல புகார்கள் பெறப்பட்டன.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஓட்டல்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை தணிக்கை குழுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இருந்தும், புகாரில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் கடந்த அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட சில நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஓட்டல்களில் அறைகள் குறைத்து காட்டப்பட்டுள்ளது.
அறை வாடகை: மேலும், அறை வாடகை தொகையை மிகவும் குறைத்து காட்டிவிட்டு, அந்த ஓட்டலின் இணையதளத்தில் அறையின் குறைந்தபட்ச வாடகையானது பல மடங்கு அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மாநகராட்சியின் வரி வருவாயில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஆலந்தூரில் ரேடிசன் புளூ ஒட்டல், விஜய் பார்க் ஓட்டல், துரைப்பாக்கம் பார்க் ஓட்டல், ஹாலிடே இன் ஓட்டல் , நோவா டெல் ஓட்டல் , ஆலந்தூரில் ஹபிலிஸ் ஓட்டல், தி நகர் ரெசிடென்சி, ஜி.ஆர்.டி கிராண்ட் போன்றவை வரி ஏய்ப்பு செய்துள்ளன.
முறைகேடுகள்: இந்த முறைகேடுகளை ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். குறைத்து வசூலிக்கப்பட்டவர்களின் சொத்துகளை மறு சீராய்வு செய்து அவற்றின் வரி ஏய்ப்பு தொகையை அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பல துரிதமான நடவடிக்கைகள் மூலம் நிலுவை வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது..
சென்னையில் பல தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள், ஆடிட்டோரியம், நீச்சல் குளங்கள் கட்டியுள்ளன. இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.. அதனால், அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து முறையாக கட்டிட அனுமதியும், சொத்து வரியும் போடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.. இப்போது, கோடைகாலம் என்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை உடனுக்குடன் கையாள சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கவுன்சிலர்கள் கொண்ட ஒரு இணைப்பு குழுவை உருவாக்க வேண்டும்" என்று பேசினார் தனசேகரன்.
பிரியா பதில்: தனசேகரனின் இந்த கோரிக்கைக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.. அப்போது, சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை மூலம் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனசேகரனுக்கு உறுதியளித்தார்... கடந்த கால ஏய்ப்பு செய்த தொகையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அழுத்ததின் காரணமாக முறைகேடுக்கு துணைபோன அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்று தனசேகரன் கோரியுள்ளதும், அதற்கு மேயர் பிரியா நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதும், அதிமுகவுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications