சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரியன்..இடியும் மின்னலுமாய் கனமழை பெய்யுமாம்..வானிலை மையம் குட் நியூஸ்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. காலை முதலே பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தாலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்யும் என்று ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் இன்னும் இரு நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. சாரல் மழையும் சிலு சிலு காற்றுமாக கடந்து விட்டது அக்னி நட்சத்திர காலம். அதே நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் மதுரை, நாமக்கல், வேலூர், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

மாலையில் பெய்த மழை
விராலிமலை ஒன்றிய பகுதியில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அதிலும் நேற்று கடுமையாக சுட்டெரித்த வெயிலால் வாகன ஓட்டிகள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆலங்குளம், பேராம்பூர், மலம்பட்டி, ஆலங்குடி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த கோடை மழை மானாவாரி நிலங்களில் கோடை உழவு பணியை தொடங்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

12 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளுத்து வாங்கப்போகும் கனமழை
அந்தவகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும்.

சென்னையில் சுடும் வெயில்
நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் சனிக்கிழமை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications