அதே “சக்கரம்”.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை மையம்! உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 1 மற்றும் ஜுன் 2 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் இளையங்குடி (சிவகங்கை) 7, சிறுகுடி (திருச்சி) 6, ஊத்து (திருநெல்வேலி), ராஜபாளையம் (விருதுநகர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), நன்னிலம் (திருவாரூர்) தலா 5, வைகை அணை (தேனி) 4, ஆண்டிபட்டி (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பாலமோர் (கன்னியாகுமரி), அரண்மனைப்புதூர் (தேனி) தலா 3, மோகனூர் (நாமக்கல்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), ஆயிக்குடி (தென்காசி), உதகமண்டலம் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), கெட்டி (நீலகிரி) தலா 2, மேல் அணை (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ஹரிசன் லிமிடெட் (நீலகிரி), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), திருமூர்த்தி IB (திருப்பூர்), TNAU கோயம்புத்தூர், சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), வலங்கைமான் (திருவாரூர்), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்) மடத்துக்குளம் (திருப்பூர்), வீரபாண்டி (தேனி), கொடவாசல் (திருவாரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை அளவு பதிவாகி உள்ளது.
ஜூன் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications