சென்னை மெட்ரோவில் பயணம் செய்கிறீர்களா? மெட்ரோ நிலையங்கள் தடம் தெரியாமல் மாறப்போகுது.. கவனம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் வரும் 16 மெட்ரோ நிலையங்களின் நுழைவு/வெளியேறும் பகுதிகளில் வணிக ரீதியிலான கட்டிட மேம்பாடுகளுக்கான வடிவமைப்பு ஆலோசகரைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய கமர்ஷியல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான மொத்தம் கட்டப்பட்ட பரப்பளவு 88,148 சதுர மீட்டராகும். இது தோராயமாக 9.48 லட்சம் சதுர அடியாகும். இந்தத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சிக்கும், மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் வணிக வாய்ப்புகளுக்கும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வணிக வளாகங்கள்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் வரவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பிரத்தியேக வணிக வளாகங்கள் அமையவுள்ளன. பயணம் செய்யும்போதே சாப்பிடவும், காபி அருந்தவும், அவசரமாக ஷாப்பிங் செய்யவும் வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 118.9 கி.மீ நீளமுள்ள இரண்டாம் கட்ட திட்டத்தில், பல மெட்ரோ நிலையங்களில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட நெட்வொர்க் மூன்று வழித்தடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மாதவரம் முதல் சிப்காட் (தடங்கள் 3), கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி (தடங்கள் 4), மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (தடங்கள் 5). இந்த மூன்று வழித்தடங்களிலும் மொத்தம் 128 நிலையங்கள் கட்டப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான நிலையங்களில், சில்லறை விற்பனை மற்றும் உணவுப் பண்டங்களுக்கான கடைகள் டிக்கெட் வழங்கும் இடங்களிலோ அல்லது பொது மக்கள் கூடும் இடங்களிலோ அமைக்கப்படும். இதனால் பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன் இந்த கடைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை
இது குறித்து ஒரு அதிகாரி தெரிவித்ததாவது, "பொதுமக்கள் கூடும் இடங்களில் பல்வேறு கடைகள் இருந்தால், நிலையங்கள் கலகலப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறும். இது சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த அதிக பயணிகளை ஈர்க்கும். ஹாங்காங் மற்றும் சீனாவில், ஷாப்பிங் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களைத் தூண்டும், மேலும் டிக்கெட் விற்பனை தவிர சில்லறை விற்பனை, விளம்பரம் போன்ற பிற வழிகளில் கணிசமான வருவாயைக் கொண்டுவரும்" என்றார்.
பெரும்பாலான நிலையங்களில் வணிக வளாகங்களுக்கான இடங்கள் இருந்தாலும், 35 நிலையங்களில் பிரத்தியேகமாக இதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதவரம் முதல் சிப்காட் வரையிலான தடங்கள் 3-ல் உள்ள 22 நிலையங்களில், மாதவரம் ஹைரோடு, செம்பியம், அயனாவரம், ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, அடையார் டிப்போ, மண்டைவெளி, ஆயிரம் விளக்கு, பெருங்குடி, காரப்பாக்கம், துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய நிலையங்களின் டிக்கெட் வழங்கும் தளங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
35 நிலையங்களில் பிரத்தியேகமாக இதற்காக இடங்கள்
தடங்கள் 4-ல் அலபாக்கம், கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப் மற்றும் பனகல் பார்க் ஆகிய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தடங்கள் 5-ல், வேல்முருகன் நகர், சாஸ்திரி நகர், திருமங்கலம், அண்ணா நகர் டிப்போ, ஆலந்தூர் மற்றும் சீனிவாசன் நகர் நிலையங்களுக்குள் பல்வேறு வகையான கடைகள் திறக்கப்படும்.
இது தவிர, ஓ.எம்.ஆர் சாலையில் வரவிருக்கும் உயர்மட்ட நிலையங்களில், நுழைவு/வெளியேறும் அமைப்புகளுக்கு மேலே வணிக வளாகங்களை உருவாக்க CMRL திட்டமிட்டுள்ளது. நேரு நகர், பெருங்குடி, பி.டி.சி காலனி, ஒக்கியம்பேட்டை, நாவலூர், செம்மஞ்சேரி, காந்தி நகர், காரப்பாக்கம், சிறுசேரி, சோழிங்கநல்லூர் ஏரி-1 மற்றும் சோழிங்கநல்லூர் ஏரி-2 நிலையங்களில் 750 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டங்களைத் தவிர, திருமங்கலம், நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர் போன்ற நிலையங்களுடன் பெரிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக CMRL ஆலோசகர்களை நியமித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications