இனி தாம்பரம், வேளச்சேரி ரூட்டிலும் வருகிறது மெட்ரோ.. பட்ஜெட்டில் அறிவித்த உடன்.. ஆரம்பித்த வேலை!
சென்னை: சென்னையில் பின்வரும் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்கான டெண்டர்களை CMRL இப்போது வெளியிட்டுள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து தலைமை செயலகம் வழியாக உயர்நீதிமன்றம் வரை அமைக்கப்படும் மெட்ரோ மற்றும் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரை அமைக்கப்படும் மெட்ரோ ஆகியவற்றிற்கு டெண்டர்களை CMRL இப்போது வெளியிட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம் டூ கிண்டி வரை வேளச்சேரி வழியாக மெட்ரோ அமைக்கப்படும், அதேபோல் துறைமுகத்தில் இருந்து லைட் ஹவுஸ் வரை மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தற்போது அதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மெட்ரோ
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடத்தின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது. பூந்தமல்லி போரூர் இடையிலான சோதனை ஓட்டம் அடுத்த 2 வாரங்களில் தொடங்க உள்ளது.
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழித்தடத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications