சென்னையே தடம் தெரியாமல் மாற போகுது.. 63 இடங்களில் மார்க் பண்ணியாச்சு.. களமிறங்கும் இரும்பு மனிதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ 2 திட்டத்தின் கீழ் மிக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai metro to get 63 new iron bridges in all over the city: What is the reason behind it?

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

களமிறங்கும் இரும்பு மனிதன்: சென்னையில் மெட்ரோ 2 திட்டத்தின் கீழ் மிக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டம் திறக்கப்படும்போது, ​​கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு மேலே வெவ்வேறு இடங்களில் 63 இரும்பு பாலங்கள் நிறுவப்படும். இந்த பாலங்களில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயிலின் 1ம் கட்டத்தில் ஒரே ஒரு இரும்பு பாலம் இருந்த போது இந்த முறை 63 இரும்பு பாலம் கொண்டு வரப்பட உள்ளது.

செங்குத்து பாலம் கட்டுவதற்கு அனுமதி குறைவாக உள்ள இடங்களில் நீண்ட நீளத்திற்கு எஃகு கர்டர்கள் நிறுவப்படும் மற்றும் கீழே உள்ள கட்டமைப்புகள், சாலைகள் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகள் இருப்பதால் தூண்களுடன் கான்கிரீட் வையாடக்ட்களை உருவாக்க முடியாது. இதனால் பாலம் அமைக்காமல் இரும்பு பாலம் அமைக்கப்படும்.

Chennai metro to get 63 new iron bridges in all over the city: What is the reason behind it?

சமீபத்தில், போரூரில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரையிலான கட்டம்-2 கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, போரூர் அருகே உள்ள மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை பைபாஸ் மேம்பாலத்தின் மேல் 222 டன் எடையுள்ள 40 மீட்டர் நீளமுள்ள இரும்பு கர்டர் பாலத்தை தொழிலாளர்கள் நிறுவினர். அதேபோல் இனி சென்னை முழுக்க இரும்பு பாலங்கள் நிறுவப்படும்.

சென்னை புறவழிச்சாலை, தெள்ளியரகரம், பூந்தமல்லி சந்திப்பு, போரூர் சந்திப்பு, வளசரவாக்கம், ஆதம்பாக்கம், ராமாபுரம் சந்திப்பு, கத்திப்பாரா, கல்லியம்மன் கோயில் தெரு, பட் ரோடு, ஈச்சங்காடு, பெரும்பாக்கம், மேடவாக்கம், ரெட்டேரி, எம்.எம்.பி.டி., உள்ளிட்ட இடங்களில் 63 மெட்டல் கர்டர்கள் அமைக்கப்படும். கோயம்பேடு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+