மெரீனா பீச்சில் அட்டகாசம்.. இளம் பெண்களை கட்டிப்பிடித்து அக்கிரமம்.. 3 வட மாநில இளைஞர்கள் கைது
மெரினா பீச்சில் இளம்பெண்களுக்கு 3 பேர் பாலியல் தொல்லை தந்துள்ளனர்
Recommended Video
சென்னை: மெரினா பீச்சில் இளம்பெண்களை கட்டிப்பிடித்து, அக்கிரமம் செய்து எல்லைமீறிய 3 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூரை சேர்ந்த இளம்பெண் அவர். வயது 24.. தன்னுடைய 21 வயது தோழியுடன், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மெரினா பீச்சுக்கு வந்துள்ளார்.

பொதுப்பணித்துறை ஆபீஸ் எதிரில் உள்ள மணல் பரப்பில் உட்கார்ந்து இருவரும் பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
அப்போது 3 வடமாநில இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே போதையில் இருந்திருக்கிறார்கள். உட்கார்ந்து பேசி கொண்டிருந்த பெண்களிடம், "ஹிந்தி தெரியுமா" என்று கேட்டு தானாக பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களில் ஒருவர், ஒரு பெண்ணை பின்பக்கம் கட்டிப்பிடித்துவிட, இன்னொருவர் மற்றொரு பெண்ணிடம் ஏடாகூடமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பெண்கள், கத்தி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, தப்ப முயன்ற இளைஞர்களை விரட்டிபிடித்து அண்ணாசதுக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களாம்.
ஹேமராஜ் பத்தரா, ரத்தன் பத்தரா, பெயிலாசான பத்தரா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தங்கி, சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்களாம். இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது, "மன்னிச்சிடுங்க.. போதையில அப்படி நடந்துக்கிட்டோம்" என்று கெஞ்சி உள்ளனர்.
எனினும் இவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. பீச்சில் தோழியுடன் சென்ற பெண், ஒரு பத்திரிகையில் வேலை பார்ப்பவர் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications