ஹேப்பி நியூ இயர்.. ஆனால் ஸ்விம்மிங் கிடையாது.. போலீஸ் புது கட்டுப்பாடு.. ஸ்டார் ஹோட்டல்களுக்கு கறார்
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் குளிக்கவும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களை நேரில் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
பின்னர் நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர் கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிக்கக் கோரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுகுறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பின் போது அவர்கள் கூறுகையில் 2023ஆம் ஆண்டுகளுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து விதிமுறைகள் வழங்கப்பட்டது அந்த விதிமுறைகளில் 100 சதவீதம் கொண்ட விடுதிகளில் 80 சதவிகிதம் வரைக்கும் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அதிகப்படியான கூட்டம் இருக்க கூடாது.

விடுதிகளில் குடிபோதை
விடுதிகளில் குடிபோதையில் வரும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு பத்திரமாக செல்வதற்கு க்யூ ஆர் கோடு மூலம் டாக்ஸி மூலம் ஏற்றி அவரை அனுப்ப வேண்டும். நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்காகவே அவசர ஆம்புலென்ஸ் வாகனத்தை வரவழைக்க வேண்டும்.

பெண்களை கேலி செய்ய கூடாது
பெண்களை கேலி செய்ய விடக்கூடாது. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். விடுதிகளில் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராவை வைக்க வேண்டும். பழுதான சிசிடிவி கேமராக்கள் உடனடியாக பழுது நீக்க வேண்டும். பொருத்தப்படாமல் இருக்கும் இடங்களில் இந்த இரு தினங்களுக்குள் கேமராவை பொருத்த வேண்டும்.

தீயணைப்பு சாதனங்கள்
தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். எளிதாக தீப்பற்றக் கூடிய பொருட்களை வைக்கக் கூடாது. வாடிக்கையாளர்களிடம் பவுன்சர்கள் அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக நட்சத்திர விடுதியில் மேலாளர்களிடம் கூற வேண்டும்.

நீச்சல் குளங்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு ரிசார்ட்கள் இருக்கும் பகுதிகளில் இரவு நேர போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மது போதையில் யாராவது பிரச்சினை செய்தால் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம்
நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது. மேலும் 1 மணிக்கு மேல் நட்சத்திர ஹோட்டல்கள் செயல்படக் கூடாது. அதிகமான போதையில் இருக்கும் நபர்களுக்கு அனுமதி கிடையாது. மெரினா சாலையில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிரோன் மூலம் கண்காணிக்க முடியும். ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை போலீஸார் மாறுவேடங்களில் கண்காணிப்பர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவர் என காவல் துறை அறிவித்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்..
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications