இனி ரூட் தலயே இருக்க கூடாது.. மீறினால் ஜெயில்தான்.. வார்னிங் கொடுத்தது சென்னை போலீஸ்!
ரூட் தல முறை இனி இருக்ககூடாது என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது
சென்னை: "இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்" என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
நேற்று பச்சையப்பன் கல்லூரி இரு தரப்பு மாணவர்களிடையே ரூட் தல பிரச்சனை விவகாரம் வெடித்தது. காலேஜ் முடிந்து ஒரே பஸ்ஸில் மாணவர்கள் சென்றபோது, ரூட் தல விவகாரம் கிளம்பி இரு தரப்புமே சரமாரியாக மோதிக் கொண்டனர்.
பஸ்ஸில் இருந்து இறங்கி நடுரோட்டில் ஓடிய மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் விரட்டி விரட்டி சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் எடுத்து தாக்கி கொண்டனர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.

2 பேர் கைது
ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு நடுரோட்டில் அங்கும் இங்கும் ஆவேசமாக நடமாடிய மாணவர்களை பொதுமக்கள் ஷாக் ஆனார்கள். தகவலறிந்து வந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். ரூட் தல பிரச்சனையில் எத்தனையோ முறை போலீசார் தலையிட்டு, மாணவர்களுக்கு அட்வைஸ் தந்தும் இந்த பிரச்சனை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறது.

கவுன்சிலிங்
அதனால், சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை போலீஸ் உயர்அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்த இன்று முடிவு செய்தார்கள் அதன்படி, மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார். அதேபோல, நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன் ஆலோசனை நடத்தினார்.

வன்முறை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் இணை ஆணையர் சுதாகர், "இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் பாயும். இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், ஆனால் இந்த நிலைமையே தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும்சரி, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அறிவுறுத்தல்
இன்னொரு முறை இப்படி மாநகர பஸ்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தால் பொது மக்கள் உடனடியாக 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல, பஸ் கூரை மீது மாணவர்கள் ஏறினால் பஸ்ஸை எடுக்க கூடாது என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மோதல்கள் ஏற்படும் வழித்தடங்களில் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்" என்றார்.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications