சென்னை துறைமுகம்-மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு டெண்டர் அறிவிப்பு.. நிறுவனங்களுக்கு முக்கிய நிபந்தனை!
சென்னை : ரூ.5,855 கோடி மதிப்பில் அமைக்கப்படும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலை பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
துறைமுகம் - மதுரவாயல் இடையே ரூ.5,855 கோடி மதிப்பீட்டில் 20.56 கி.மீ தொலைவிற்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, பின்னர் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டப்பணிகளை தொடங்கி 30 மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தடை
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்க கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றி வெள்ளத்திற்கு வழிவகுக்கும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர்மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது.

மீண்டும் பணிகள்
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் வேகமெடுத்தன. அதன்படி மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலைத் திட்டம் ரூ.5,855 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது.

இரண்டு அடுக்குகளாக
இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையில் அமையும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய்தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து
இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.5,855 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.

டெண்டர்
இந்நிலையில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் 30 மாதத்திற்குள், அதாவது இரண்டரை ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்த இந்தப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications