சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. ஆகஸ்ட் 26ம் தேதி பவர் கட் இடங்கள் விவரம்
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 26ம் தேதியான நாளை மின்தடை ( chennai power cut ) ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஞாயிறு ஒன்றை தவிர மற்ற நாட்களில் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது காலையில் 9 மணிக்கு தடை செய்யப்படும் மின்சாரம் மாலை 5 மணி வரை நிறுத்தப்பபடும். பராமரிப்பு பணிகள் விரைவாக முடிந்தால் முன்பே மின்சாரம் விநியோகிக்கப்படும். அதேபோல் சென்னையில் அரைநாளிலேயே மின்சார பராமரிப்பு பணிகள் முடிந்துவிடும்.

அதாவது சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன் விவரம் வருமாறு: பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
தேனாம்பேட்டை: எல்லியம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே ரோடு, கேஆர் ரோடு, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும் 2வது தெரு, மகாராஜா சாலை.
கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.
நன்மங்கலம்: அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோவில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சுவாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.
தமிழகத்தில் உள்ள ஊரில் இன்று மின்தடையா அல்லது நாளை மின்தடையா என்பதை https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையதளம் மூலம் எளிதாக அறியலாம். அதில் எந்த சர்க்கிள் என்பதை கிளிக் செய்து கேப்ச்யாவை டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும். அதில் மின்தடை இருந்தால் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
மகேந்திரன் சொன்ன தமிழக மின்சார நெருக்கடி.. 6 மாசம் கரண்ட் கட் இருந்தா என்ன? பிரபல நடிகர் விளக்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications