தாம்பரம் டூ பல்லாவரம்.. மின்சார ரயிலை நம்பி சென்னைக்கு வராதீங்க.. நாளை முதல் மேஜர் மாற்றம்
சென்னை: ஏற்கனவே தாம்பரத்திற்கு இரவில் ரயில் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வரும் நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை பகலிலும் பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் பயணிகள் இந்த அட்டவணை படி பயணத்தை திட்டமிடலாம்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் பராமாிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில், கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதேநேரம் தெற்கு ர'யில்வே நேற்று (1-ம் தேதி) வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம் இருப்பதாகவும், கூடுதலாக சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது..
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10 30 மணி முதல் அதிகாலை 2 45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: அதநேரம் ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படும்.
இதேபோல் பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். அதேநேரம் செங்கல்பட்டு-கூடுவாஞ் சோி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் கிடையாது.
நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5 15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரயில்களை போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்.
நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரயிலாக இயக்கப்பட உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கூடுவாஞ்சேரி-பல்லாவரம் இடையே நாளை(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10 30 மணி முதல் அதிகாலை 2 45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications