இன்று முதல் ஒரு வாரம் வரை! சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்! அந்த ரூட்ல போகாதீங்க!
சென்னை: சென்னையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் செய்யப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. சொகுசான பயணம் என்பதால் பெரும்பாலானோர் தங்களது கார், பைக்குகளை விட்டுவிட்டு மெட்ரோவில்தான் பயணிக்கிறார்கள்.

இந்த நிலையில் 3ஆம் கட்ட மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகள் முடிந்துவிட்டால் சென்னையில் மெட்ரோ ரயிலின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும்.
மாதவரம் பால் பண்ணை டூ சிப்காட் பூங்கா, பூந்தமல்லி டூ லைட் ஹவுஸ், மாதவரம் பால் பண்ணை டூ சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் ரூ 61,800 கோடியில் 116 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இது அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த 3 வழித்தடங்களும் முழுமையாக செயல்பாட்டுக்கு வர 2028 வரை காத்திருக்க வேண்டும்.
மெட்ரோ கட்டுமானத்தால் சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது இன்று முதல் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்துவதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லவும், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடது புறம் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் திருமலை பிள்ளை ரோடு வழியாக ஜி.என். செட்டி சாலை வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்றடையலாம்.
மற்ற பிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து அனுமதிக்கப்படும். மாற்றத்திற்குத் தகுந்தபடி போக்குவரத்து வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications