அங்கே வர்றது என் பொண்டாட்டி மாதிரி இருக்கே! முதல்ல அம்சவல்லி, அடுத்தது லட்சுமி.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையை சேர்ந்த லட்சுமணனுக்கு உடம்பெல்லாம் மச்சம் போல.. பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுதானே ஆகணும்? இதோ இப்ப சார் வசமாக சிக்கிட்டாரு.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் இந்த லட்சுமணன். 37 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. கல்யாணமாகிவிட்டது.. இவரது முதல் மனைவி பெயர் கலைச்செல்வி.. அதற்கு பிறகு 2 வதாக இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. அந்த மனைவி பெயர் லட்சுமி.

பிறகு இந்த 2 மனைவிகளுக்கும் தெரியாமல், 3வதாக இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார் லட்சுமணன்.. அவர் பெயர் அம்சவல்லி.. இவருக்கு 36 வயதாகிறது.. இப்போதைக்கு அம்சவல்லியுடன்தான் லட்சுமணன், பாடியநல்லூர் பகுதியில் குடித்தனம் நடத்தி வருகிறார்.
மாப்பிள்ளை: ஆனாலும் லட்சுமணன் ஓயவில்லை.. 4வதாக கல்யாணம் செய்ய தயாரானார்.. அந்த பெண்ணின் பெயர் கவி.. இவர் சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவராம்.
மற்ற 3 மனைவிகளுக்கு தெரியாமல், கவியை 4வதாக கல்யாணம் செய்ய முடிவெடுத்தார்.. இதற்காக நேற்று காலை பாடியநல்லூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாப்பிள்ளை கோலத்தில் வந்தார்.. அப்போது மணப்பெண் கவியும் கோவிலுக்கு வந்தார்..
அம்சவல்லி: அப்போதுதான், லட்சுமணனுக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம், புதுமணப்பெண் கவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற கவி, அதைபற்றி லட்சுமணனின் எதையும் காட்டிக் கொள்ளாமல், 3வது மனைவி அம்சவல்லிக்கு ரகசியமாக தகவல் தந்து, உடனடியாக கோவிலுக்கு கிளம்பி வரச்சொன்னார்.
உடனே அம்சவல்லி தன்னுடைய சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து கொண்டு கோயிலுக்கு வந்துவிட்டார்.. கவி கழுத்தில் லட்சுமணன் தாலி கட்டுவதற்குள், அம்சவல்லி வந்துவிட்டார்.. அத்துடன் நடக்கவிருந்த 4வது திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்.. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். திடீரென ஒட்டுமொத்த பேரையும் பார்த்ததுமே மாப்பிள்ளைக்கு தூக்கிவாரிப்போட்டது.
பரபரப்பு: பிறகு லட்சுமணனை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.. உடனே, 3வது மனைவி அம்சவல்லியும் 4வது திருமணம் செய்வதற்காக வந்திருந்த கவியும் போலீசாரிடம் "புகார் எதுவும் வேண்டாம், நாங்களே சமாதானமாக சென்றுவிடுகிறோம்" என்று சொன்னார்கள்.. இதையடுத்து லட்சுமணனை போலீஸார் கடுமையாக வார்னிங் தந்து அனுப்பினார்கள்.. 3வது மனைவிக்கு 4வதாக வாக்கப்படவிருந்த பெண் கொடுத்த தகவலால், திருமணம் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications