அட கொடுமையே.. காதலி போனை எடுக்காததால்.. காதலன் தூக்குப்போட்டு தற்கொலை.. சென்னையில் சோகம்
சென்னை: சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு கே எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் பீட்டர் (27). திருமண மண்டபங்களில் டெக்கரேஷன் போடும் வேலை செய்து வருகிறார். இவரும், புளியதோப்பு டோபிகண்ணா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த மூன்று ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு பெண்னின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.நேற்று காலை 10 மணிக்கு பீட்டர் அவரது வீட்டில் பாத்ரூம் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தம்பி ஷாம் கதவைத் தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுஅவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீட்டர் இரும்பு பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.அதிர்ச்சியில் இருந்து மீளாத ஷாம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பீட்டரின் தற்கொலை குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தினார்கள்.

மூன்று ஆண்டுகளாக காதல்
முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியனாது. பீட்டரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இருவரும் தொடர்ந்து போனில் பேசி வந்தததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

காதலி போனை எடுக்கவில்லை
பீட்டர் போன் செய்தபோது அந்த பெண் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலையிலும் பலமுறை போன் செய்தும் அந்த பெண் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் விரக்தியில் இருந்து வந்த பீட்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதான் பீட்டர் தற்கொலைக்கு உண்மையான காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications