சென்னையில். அசத்தும் தண்டையார்பேட்டை.. கவலை தரும் கோடம்பாக்கம்.. கொரோனா மண்டல வாரியான விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தண்டையார் பேட்டை மண்டலம் கொரோனாவிலிருந்து வேகமாக மீண்டுள்ளது. ஆனால் அதேநேரம் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எந்த மண்டலத்தில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.

சென்னையில் இதுவரை 85,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 69,392 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 15,042 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சென்னையில் உள்ளனர். 1434 பேர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கொரேனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது.

ராயபுரம் நிலவரம்

ராயபுரம் நிலவரம்

  • திருவெற்றியூர்: குணம் அடைந்தவர்கள்: 2627 உயிரிழந்தவர்கள் 73. ஆக்டிவ் நோயாளிகள் 545
  • மணலி: குணம் அடைந்தவர்கள்: 1306. உயிரிழந்தவர்கள் 17. ஆக்டிவ் நோயாளிகள் 255
  • மாதவரம்: குணம் அடைந்தவர்கள்: 2234. உயிரிழந்தவர்கள் 35. ஆக்டிவ் நோயாளிகள் 389
  • தண்டையார் பேட்டை: குணம் அடைந்தவர்கள்: 7751. உயிரிழந்தவர்கள் 192. ஆக்டிவ் நோயாளிகள் 807
  • இராயபுரம்: குணம் அடைந்தவர்கள்: 9031. உயிரிழந்தவர்கள் 176. ஆக்டிவ் நோயாளிகள் 1033
திருவிநகர் நிலவரம்

திருவிநகர் நிலவரம்

  1. திருவிக நகர்: குணம் அடைந்தவர்கள்: 5691. உயிரிழந்தவர்கள் 153. ஆக்டிவ் நோயாளிகள் 1009
  2. அம்பத்தூர்: குணம் அடைந்தவர்கள்: 3346. உயிரிழந்தவர்கள் 53. ஆக்டிவ் நோயாளிகள் 905
  3. அண்ணா நகர்: குணம் அடைந்தவர்கள்: 8011. உயிரிழந்தவர்கள் 148. ஆக்டிவ் நோயாளிகள் 1586
  4. தேனாம்பேட்டை: குணம் அடைந்தவர்கள்: 7896 உயிரிழந்தவர்கள் 209. ஆக்டிவ் நோயாளிகள் 1316
  5. கோடம்பாக்கம்: குணம் அடைந்தவர்கள்: 7456. உயிரிழந்தவர்கள் 152. ஆக்டிவ் நோயாளிகள் 2119

வளரசரவாக்கம்

வளரசரவாக்கம்

  • வளசரவாக்கம்: குணம் அடைந்தவர்கள்: 3515. உயிரிழந்தவர்கள் 50. ஆக்டிவ் நோயாளிகள் 723
  • ஆலந்தூர்: குணம் அடைந்தவர்கள்: 1934. உயிரிழந்தவர்கள் 33. ஆக்டிவ் நோயாளிகள் 537
  • அடையாறு: குணம் அடைந்தவர்கள்: 4442. உயிரிழந்தவர்கள் 82. ஆக்டிவ் நோயாளிகள் 1085
  • பெருங்குடி: குணம் அடைந்தவர்கள் 1872. உயிரிழந்தவர்கள் 32. ஆக்டிவ் நோயாளிகள் 355
  • சோழிங்கநல்லூர்: குணம் அடைந்தவர்கள்: 1507. உயிரிழந்தவர்கள் 12. ஆக்டிவ் நோயாளிகள் 355
  • பிற மாவட்டங்கள்: குணம் அடைந்தவர்கள்: 763. உயிரிழந்தவர்கள் 17. ஆக்டிவ் நோயாளிகள் 1989
  • சென்னை மொத்த விவரம்: குணம் அடைந்தவர்கள்: 69382. உயிரிழந்தவர்கள் 1434. ஆக்டிவ் நோயாளிகள் 15042
கொரோனா குறைவு

கொரோனா குறைவு

சென்னையிலேயே மிக அதிக பட்சமாக தண்டையார் பேட்டையில் 89 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். வெறும் 9 சதவீதம் நோயாளிகளே உள்ளனர். சென்னையிலேயே மிக குறைந்தபட்சமாக கோடம்பாக்கத்தில் 77 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். அங்குதான் அதிக அளவில் நோயாளிகள் உள்ளனர். சென்னையில் ஒட்டுமொத்தமாக 81 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். 18 சதவீதம் ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 1.67 சதவீதம் நோயாளிகள் சென்னையில் பலியாகி உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உயிரிழப்பு விகிதம் திருவெற்றியூர் மண்டலத்தில் அதிகமாக உள்ளது. அங்கு 2.32 சதவீதம் பேர் இறந்துள்ளனர். சோழிங்க நல்லூர் மண்டலத்தில்தான் சென்னையிலேயே மிக குறைவான உயிரிழப்பு (0.69 சதவீதம்) விகிதம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+