சென்னை மக்களுக்கு நற்செய்தி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே கடல்போல காட்சியளிக்கும் பிரதான ஏரிகள்!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதிலும் தலைநகர் சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்துள்ளது என்றே கூறலாம்.
நேற்று கூட வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

சென்னையின் குடிநீர் தேவை
சில வாரங்களாகவே பெய்து வரும் மழை சென்னையை மட்டும் குளிர்விக்கவில்லை. சென்னை மக்களின் மனம் குளிரும்படியான ஒரு நல்ல செய்தியை கொடுத்துள்ளது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகின்றன என்ற செய்திதான் அது. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம். இந்த நான்கு ஏரிகள்தான் பிரதானமாக சென்னை மக்களின் தாகம் தீர்த்து வருகின்றன.

கைகொடுக்கும் ஏரிகள்
புதிதாக சென்னை குடிநீருக்காகவே அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியும் உதவுகிறது. இது தவிர நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது எல்லாம் கைவிட்டால் கடலூர் வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் கொண்டு வந்து சென்னை தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ரயிலில் வந்த குடிநீர்
சில ஆண்டுகள் நல்ல மழை பெய்து இந்த ஏரிகள் நிரம்பினால் சென்னை குடிநீருக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் பருவமழை பொய்த்து விட்டால் சென்னை பாடு திண்டாடட்டம்தான். வேறு வழியில்லாமல் செங்கல்பட்டு ஏரியில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்தும் ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து சென்னையின் தேவையை போக்கிய வரலாறு எல்லாம் உண்டு.

இந்த முறை மகிழ்ச்சி
கடந்த ஆண்டு ஓரளவு பருவ மழை சாதகமாக இருந்ததால் ஏரிகளில் நீர் மட்டம் எதிர்பார்த்த விதத்தில் உயர்ந்தது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே ஏரிகளில் நீர் நிரம்பி வருவது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

நிரம்பும் ஏரிகள்
ரெட்ஹில்ஸ் ஏரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20- ஆம் தேதி 73.5 சதவிகிதம் நீர் இருப்பு இருந்தது . ஆனால் இந்த ஆண்டு 79.2 சதவிகிதம் தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி 47.5 சதவிகிதம் தண்ணீர் இருந்தது. இது இப்போது 68.3 சதவிகிதமாக உள்ளது.

பூண்டி, சோழவரம்
மிக முக்கியமான பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3.7 சதவிகிதம் மட்டுமே இருந்தது. நடப்பாண்டு 69.8 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 56.6 சதவிகிதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணன் கோட்டை நீர் தேக்கத்தில் 97.2 சதவிகிதம் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
Recommended Video

6 மாதத்துக்கு போதுமானது
மொத்தத்தில் கடந்த ஆண்டு இதே தேதியில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 37.2 சதவிகிதம் நீர் இருப்பு மட்டுமே இருந்தது. நடப்பாண்டு மொத்தம் 71.9 சதவிகிதம் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் 6 மாதத்திற்கு போதுமானதாக உள்ளது. இதுதவிர நடப்பாண்டுக்கான பருவ மழையும் நன்றாக இருந்தால் ஏரிகளில் நீர் மட்டத்தை மேலும் உயர்த்த முடியும். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆக சென்னை மக்கள் இன்னும் சில காலத்துக்கு குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை பறைசாற்றும் விதமாகவே மேற்கண்ட தரவுகள் உள்ளன.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications