சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. 53 மெனுவில் 700 டிஷ்.. 3500 வெரைட்டி.. அசர வைக்கும் செஸ் ஒலிம்பியாட் உணவு பட்டியல்!

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 53 மெனுக்களில் 700 டிஷ்கள் மற்றும் 3,500க்கும் அதிகமான வெரைட்டி உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. போட்டி நடைபெறும் 14 நாளில் ஒருமுறை வழங்கப்பட்ட உணவு மறுமுறை வினியோகம் செய்யாத வகையில் உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    chess Olympiad வீரர்களுக்கு Idly, Vadaiயோட Breakfast

    கிரிக்கெட்டுக்கு உலக கோப்பை போட்டி போன்று செஸ் வீரர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

    இதில் ஒன்று கூட இந்தியாவில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

    பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் அசத்தலாக வந்த முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் அசத்தலாக வந்த முதல்வர் ஸ்டாலின்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி

    செஸ் ஒலிம்பியாட் போட்டி

    இந்த போட்டிகள் நாளை துவங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. பிரமாண்டமான அரங்குகள் ஏற்படுத்தப்ட்டுள்ளதோடு, வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளது. மாமல்ல மொத்தம் 187 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கணைகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர். இந்த போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி உள்பட மத்திய-மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சுகாதாரமான உணவு வழங்க திட்டம்

    சுகாதாரமான உணவு வழங்க திட்டம்

    இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்-வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு சிறப்பான வகையில் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி நடைபெற உள்ள 14 நாளும் சத்தான, சுதாதாரமான உணவு பரிமாறப்பட உள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பரிமாறப்பட்ட உணவுகளை மீண்டும் பரிமாறாமல் வித்தியாசமான அதேநேரத்தில் சுவையான உணவு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் வீரர்களுக்கு தினமும் வெவ்வேறு வகையான உணவுகள் கிடைக்க உள்ளது.

    700 டிஷ்-3,500 வெரைட்டிகள்

    700 டிஷ்-3,500 வெரைட்டிகள்

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மொத்தம் 77 மெனு கார்டுகள் தயார் செய்யப்பட்டன. இதில் 53 மெனு கார்டுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மெனுக்கள் படி 700க்கும் மேற்பட்ட பிரதான உணவுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சிற்றுண்டிகள், சாஸ்கள் என 3,500க்கும் அதிகமான உணவு வெரைட்டிகள் வினியோகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் உணவு வகைகள் இடம்பெறும்படி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

    பட்டியல் தயாரிக்க ஒருவாரம்

    பட்டியல் தயாரிக்க ஒருவாரம்

    இந்த உணவு ஏற்பாடுகள் குறித்து இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான 75 வயது நிரம்பிய ஜிஎஸ் தால்வார் கூறுகையில், ‛‛செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உணவு பட்டியலை தயாரிக்க ஒருவாரம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, ஆசியா, ஐரோப்பா உள்பட வெவ்வேறு பிராந்தியங்களில் நடைமுறையில் உள்ள காலை, மதியம், இரவு உணவுகளை ஆராய்ந்து மெனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேநீர், சூப்கள், பழச்சாறு, ஸ்டார்டர்கள், சாலட்டுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    37 ஓட்டல்கள் தேர்வு

    37 ஓட்டல்கள் தேர்வு

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் 23, இரண்டு மற்றும் மூன்று நட்சத்திர ஒட்டல்கள் 14 என மொத்தம் 37 ஓட்டல்கள் உணவுகளை தயாரிக்கின்றன. இந்த ஓட்டல்களில் தயாரிக்க வேண்டிய உணவுகளின் பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள உணவுகளை மாற்றம் செய்யக்கூடாது என ஓட்டல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தரமான உணவுகள் வழங்குவது குறித்து ஓட்டல் நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது'' என்றார்.

     ஒயின்-பீர்

    ஒயின்-பீர்


    இட்லி, தோசை என இந்திய உணவு வகைகள் முதல் ஆசியா, ஐரோப்பாவில் பின்பற்றப்படும் உணவுகள் என அனைத்து வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சிறப்பு ஒயின்கள், பீர்கள் ஆகிய மதுபானங்களும் மெனுவில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    700 dishes and more than 3,500 variety of food items will be served in 53 menus for the Chess Olympiad. A food list has been prepared in such a way that the food provided once during the 14 days of the competition will not be distributed again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X