செஸ் ஒலிம்பியாட் டூ அண்ணா பல்கலை.! பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை.. பயண திட்டம் வெளியீடு!
சென்னை: பிரதமர் மோடி சென்னை ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக நாளை சென்னை வர உள்ள நிலையில், அவரது பயணத் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
Recommended Video
சென்னையில் நாளைய தினம் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது.
இதில் அனைத்து போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்
வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் இந்தப் போட்டியில், சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போட்டி நடைபெறும் இடமும் போலீசார் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். நாளை மாலை 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இதனால் அங்குப் பல அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பயணத் திட்டம் வெளியீடு
செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி நாளை இரவு ஆளுநர் மாளிகையிலேயே தங்குகிறார். அதைத் தொடர்ந்து மறுநாள் அவர் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயண விவர திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

குஜராத்தில் இருந்து
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 28) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். மாலை 4.45க்கு சென்னை வரும் அவர் சிறிது நேரம் அங்குள்ள ஓய்வறையில் ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் மாலை 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5.45 மணிக்கு அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்கரை தளத்திற்கு வருகிறார்.

ஆளுநர் மாளிகையில் ஓய்வு
அங்கிருந்து சாலை மார்க்கமாக 5.50 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 7.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த உடன், அவர் அங்கிருந்து நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சுமார் 7.50 மணியளவில் செல்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையிலேயே ஓய்வெடுக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் சாலை வழியாக ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் 42ஆவது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 11.35 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்குப் பிரதமர் மோடி செல்கிறார்.

பாதுகாப்புப் பணி
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் அவர் மீண்டும் குஜராத் திரும்புகிறார். மதியம் 2.15 மணி அளவில் அவர் குஜராத் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த இரு நாள் பயணத்திற்காகச் சென்னை முழுவதும் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications