Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஸ் ஒலிம்பியாட்: உங்ககிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.. ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு விருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்த இந்தியாவிடமிருந்து தாங்கள் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Tamilnadu-ஐ விரும்பும் உலக விளையாட்டு அமைப்புகள்..

    இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ஏற்கெனவே நேர்மறையான கருத்துக்கள் வந்திருந்த நிலையில் தற்போது ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தொடக்கம்

    தொடக்கம்

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி தொடங்கிய கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாடுவர்.

    போட்டி

    போட்டி

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.

     முன்னிலை

    முன்னிலை

    இந்நிலையில், கடந்த 29ம் தேதி முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் முதல் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஒலிம்பியாட் போட்டியின் முதல் வெற்றியை ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்காக விளையாடிய ரவுனக் சாத்வானி பதிவு செய்தார். அவர் தனது 36-வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை சாய்த்து முதல் வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி சிறப்பாக விளையாடி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    போட்டி இவ்வாறு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், இந்தியாவிடமிருந்து தாங்கள் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராபர்ட் கப்பாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் நாட்டில் அடுத்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து அறிந்துகொள்ள எங்கள் அணி இந்த போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டது" என்று கூறினார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    மேலும், "தற்போது சென்னையில் நடைபெற்று வரும் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. போட்டி குறித்து சென்னையின் கடைக்கோடி மக்களுக்கும் தகவல் சென்று சேர்ந்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. போட்டி நடைபெறும் இடம், பங்கேற்பாளர்களுக்கான தங்கும் வசதிகள், அவர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் நிறைய கற்று வருகிறோம். தற்போது இந்த கற்றலில் பாதி தொலைவில் இருக்கிறோம். போட்டி முடிவதற்குள் முழுமையாக கற்றுக்கொள்வோம்" என கப்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+