”உற்சாக வரவேற்பு” கோவை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்.. வழிநெடுகிலும் குவிந்த திமுக தொண்டர்கள்!
சென்னை: ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் வாயிலாக கோவைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு வலி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் கடந்த அக்.30ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலினின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதுகு வலி பிரச்சனை காரணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் வீட்டில் இருந்தபடி சில நாட்கள் பணிகளில் ஈடுபட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் மீண்டும் பல மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் கோவை வருவதையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் வருகையை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த கோவை தங்கம் சமீபத்தில் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு கோவை வந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று குடும்ப உறுபினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முக ஸ்டாலின் நேரில் ஆறுதல்
முதலமைச்சர் வருகையை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த கோவை தங்கம் சமீபத்தில் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு கோவை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஈரோட்டில் ஸ்டாலின்
இதையடுத்து ஈரோடு செல்லும் முக ஸ்டாலின், அங்கு திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். பின்னர் நாளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தடா கோவில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். தொடர்ந்து அங்கு இருந்து புறப்படும் முக ஸ்டாலின், திண்டுக்கல் செல்கிறார். அன்று மாலை திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

முக ஸ்டாலின் - மோடி
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு பின் முக ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது. பிரதமர் மோடி வருகையால் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு பின் முக ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது. பிரதமர் மோடி வருகையால் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications