சென்னைக்கு இதுதான் சூப்பர் தீபாவளி.. இன்னும் 'இரண்டே நாள்' தான்.. ஈஸியாக போகலாம்!
சென்னை : சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட மேம்பாலங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேட்டில் மேம்பாலப் பணிகள் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.09.2015ல் துவக்கப்பட்டது. இப்பணி 28.06.2018-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக 2017-க்குப் பின்பு தான் பணிகள் தொடங்கின.
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் 2020 ஆண்டு முடிந்திருந்தன. ஆனால் கொரோனா,மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதம் ஆனது. இதேபோல் நிலப்பிரச்சனையும் இருந்தது. இதை கடந்த செப்டம்பரில் சரி செய்த தமிழக அரசு 99 சதவீத பணிகளை விறுவிறுப்பாக முடித்தது.

நெரிசல்
இந்நிலையில் பாலத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஏனெனில் தினந்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வந்தனர். கடந்த ஆயுத பூஜை சமயத்தில் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனால், மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் தீபாவளி பண்டிகை சமயத்தில் மிக மோசமான நெரிசலை கோயம்பேடு சந்திக்கும் அபாயமும் இருந்தது.

குறையும் நெரிசல்
வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது. மூன்று ஆண்டு கால பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது. பின்னர் 23.12.2015ல் பணி துவங்கியது . இந்த பணி ஒப்பந்தப்படி 22.09.2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் மெதுவாக நடந்து வந்தது.கொரோனா காரணமாக பணிகள் கடுமையாக பாதித்தது.

மேம்பாலம்
வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது. மூன்று ஆண்டு கால பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது. பின்னர் 23.12.2015ல் பணி துவங்கியது . இந்த பணி ஒப்பந்தப்படி 22.09.2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள்மெதுவாக நடந்து வந்தது.கொரோனா காரணமாக பணிகள் கடுமையாக பாதித்தது.

பாலம் திறப்பு
இந்நிலையில் வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த பாலத்தையும் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கு மேம்பாலம் 31.12.2021க்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரருக்கும் தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வேளச்சேரி முதல் அடுக்கு மேம்பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications