சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் சொன்ன குட் நியூஸ்..இனி மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ள முதல்வர் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

 சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம்.. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம்.. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்கள்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும், இந்த நாள் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.

நான் முதல்வன்

நான் முதல்வன்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.

திறனாளிகளாக மாற்றுவோம்

திறனாளிகளாக மாற்றுவோம்

அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரே ஒருவருக்கு என்றாலும் அது நன்மை பயக்கும் என்றால் அந்த செயலை நாம் செய்ய வேண்டும். ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது என்பதற்காக கலைஞர் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உருவாகினார் என்று கூறினார்.

அன்பு பாதை

அன்பு பாதை


மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன் என்று கூறினார்.

ரூ.1500 ஓய்வூதியம்

ரூ.1500 ஓய்வூதியம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister MK Stalin has announced that the disabled pension will be increased to Rs.1500. The Chief Minister, who has made a very important announcement today on International Day of Persons with Disabilities, has announced that the pension will be increased from January 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X