அறநிலையத் துறையின் பொற்காலம்.. அவர் சேகர்பாபு இல்லை 'செயல்பாபு'.. புகழந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துவைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது எனப் புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட 'செயல்பாபு' என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் திருவான்மியூரில் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை புகழந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சரின் செயல்பாடுகளால் அறநிலையத்துறையின் பொற்காலம், இன்னும் சில மாதங்களில் உருவாகும் என்றார்.

சேகர்பாபு இல்லை 'செயல்'பாபு
அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின், "அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எப்படி பணியாற்றுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட 'செயல்பாபு' என்றுதான் அழைக்க வேண்டும். அந்த பெயருக்கு முழு தகுதிப் படைத்தவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். சட்டசபையில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரக் காலம்தான் ஆகிறது. இன்னும் சட்டசபை கூட்டத்தொடர் முடியவும் இல்லை, 13ஆம் தேதிதான் முடிகிறது. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடிவதற்குள் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான்.

எள் என்றால் எண்ணெய்
'எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள்' என்போம். ஆனால், சேகர்பாபுவை பொறுத்தவரையில் எள் என்று சொல்லக்கூடத் தேவையில்லை. அதற்குள் எண்ணெய்யாக வந்து நிற்பார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கின்றனர். அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துவைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அமைச்சராக அவர் இருக்கிறார். கோயில் நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைவனைப் போற்றக்கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் பொற்காலம்
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின் அவர் யாரும் செய்யாத வகையில், 120 அறிவிப்புகளை வெளியிட்டார். அது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. புதிய தேர்கள் வலம் வரவுள்ளன. அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்குக் குடியிருப்புகள் கட்டித்தரப்படவுள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டவுடன், அறநிலையத்துறையின் பொற்காலம், இன்னும் சில மாதங்களில் உருவாகும். அந்த வரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய 12,959 கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று நான் தொடங்கி வைக்கிறேன்.

13 ஆயிரம் குடும்பங்கள்
இதனால், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அரசுக்குக் கூடுதலாகச் செலவாகும். மன்னிக்க வேண்டும். இதை நான் செலவு என்று சொல்லவில்லை. இதன்மூலம், 13,000 குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள். ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதி 2 லட்ச ரூபாயாக அதிகரித்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது
சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக நிறைவேற்றத் திட்டம் வகுத்துள்ளோம். வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. அதனை நானே மாதம்தோறும் கண்காணிக்கவிருக்கிறேன். ஒவ்வொரு திட்டத்துக்கும் முன்னுரிமை தந்து அதையெல்லாம் நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபடவுள்ளேன். அனைத்துத் துறைகளையும் முந்திவிட்டு 'செயல்பாபு' தன் துறை திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்" என்று கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications