காலண்டரை புரட்டி புரட்டி பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்! அதிகாரிகள் ஹேப்பி! அப்படி என்ன அதில் ஸ்பெஷல்!
சென்னை: சென்னையில் புத்தககாட்சியை தொடங்கி வைத்து அரங்கத்திற்குள் ஒரு ரவுண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தமிழ் வளர்ச்சித்துறை தயாரித்திருந்த புதுமையான மாத காலண்டர் ஒன்றை ஆர்வமுடன் புரட்டி புரட்டி பார்த்து அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.
முதலமைச்சர் இந்தளவுக்கு கவனித்து பார்த்த அந்த நாட்காட்டியானது, முழுக்க முழுக்க சங்க இலக்கிய பாடல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த சங்க இலக்கிய மாத நாட்காட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் கொடை, வீரம், வாழ்வியல் நெறிமுறை, காதல், அன்பு, அறிவியல், இயற்கையோடு இயைந்த வாழ்வு, வாணிகம் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் இந்த மாத காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய மாத நாட்காட்டி
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 46-வது சென்னை புத்தகக் காட்சி 2023ஐ தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கிய மாத நாட்காட்டியினை வெளியிட்டார். இதனை முதல்வரிடமிருந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நாட்காட்டிகள் தயாரிக்கும் பணியைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அறிவிப்பான 'தீராக் காதல் திருக்குறள்' என்ற திட்டத்தின் கீழ், திருக்குறளின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குறள் குறளோவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 12,000 மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காலவரையற்ற தினசரி நாட்காட்டியாக (Infinity Calendar) அச்சிட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழரின் கொடை
இவ்வாண்டும், சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கிய மாத நாட்காட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரின் கொடை, வீரம், வாழ்வியல் நெறிமுறை, காதல், அன்பு, அறிவியல், இயற்கையோடு இயைந்த வாழ்வு, வாணிகம் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் தமிழறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சங்க இலக்கியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகாரிகள் மகிழ்ச்சி
இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஓவியங்களாக வரையப்பட்டு, உரிய விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் மாத நாட்காட்டியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் மனம் கவரும் வகையில் காலண்டர் அமைந்திருந்ததால் அதை தயாரிக்கும் பொறுப்பில் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications