5ம் தலைமுறை.. ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் ஜெட்.. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் J-35A ராட்சசன்!
பெய்ஜிங்: சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35A-வை பாகிஸ்தானுக்கு விற்க உள்ளது. இதற்கான பணிகளை சீனா வேகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரம் முன் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து சீனா மற்றும் பாகிஸ்தான் மேலும் நெருக்கமாகி உள்ளன. இரண்டு நாடுகளின் உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் கடந்த சில நாட்களுக்கு சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டன.
இந்தியா பாகிஸ்தான் போருக்கான வெகுமதி இந்த விமானம் என்று சீனா அரசு தரப்பு பாகிஸ்தானிடம் கூறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தற்போது சீனாவில் உள்ளார். ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து 30 J-35A ஜெட் விமானங்களின் முதல் தொகுதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையை மேலும் பலமாக்கும் வகையில் இந்த விமானங்கள் அனுப்பப்பட உள்ளன.
சீனா இந்த போர் விமானங்களில் பாகிஸ்தானுக்கு 50 சதவீத தள்ளுபடியையும், எளிதான கட்டண விருப்பங்களையும் வழங்கியுள்ளதாக உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது கடனுக்கு விமானங்களை வாங்கிவிட்டு பின்னர் குறைந்த வட்டியில் கடனை திருப்பி தரலாம். பாகிஸ்தான் விமானப்படையின் இந்தியாவிற்கு எதிரான செயல்திறனுக்கான வெகுமதியாக இந்த நடவடிக்கையை சீனா எடுத்ததாக கூறப்படுகிறது. சீனாவின் நவீன ஜென் போர் விமானங்களில் இதுவும் ஒன்று.
சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35Aவை பெறுவதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை புதிய வலிமை அடையும்.

பாகிஸ்தானுக்கு சீனாவின் உதவி
கடந்த மே 10ம் தேதி நிறைவு பெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் உதவிகளை வழங்கியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியா முன்னர் கருதியதை விட கூடுதலாக சீனா இந்த மோதலில் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் எங்கே உள்ளன, போர் விமானங்கள் எந்த ஹேங்கரில் உள்ளன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை திறம்பட கண்டறிய சீனா தனது ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டுப் போர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற படுகொலைக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கும் இடையிலான 15 நாள் இடைவெளியில் சீனா பல தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது. இந்தியா மீதான தனது செயற்கைக்கோள் கவரேஜை சரிசெய்ய சீனா பாகிஸ்தானுக்கு உதவியது என்று அவர் கூறினார். இந்த இடைவெளியில் பல செயற்கோள் தகவல்கள், போர் திட்டமிடல் தொடர்பான பல தகவல்களை சீனா இந்தியாவிற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
சீனாவின் தலையீடு
இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.
இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications