இதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.. பயங்கரம்.. பொய் பல்டி அடித்த நடிகர் சதீஷை வெளுத்த சின்மயி
சென்னை: நடிகை தர்ஷா குப்தா சொல்லாமலேயே அவர் சொல்லித்தான் அவரது கவர்ச்சி உடை குறித்து தான் பேசியதாக நடிகர் சதீஷ் சொல்லியது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த விழாவில் சன்னி லியோன் மும்பையிலிருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த படத்தில் தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ் சர்ச்சைக்குரி. வகை.யில் பேசி வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார்.
கவர்ச்சி நடிகை என அழைக்கப்படும் சன்னி லியோன் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நம் கலாச்சாரத்திற்கு ஏற்றுடி வந்திருக்கிறார் என்றும் கோவை பெண்ணான தர்ஷா குப்தா, கவர்ச்சியான உடையை அதாவது நம் கலாச்சாரத்திற்கு எதிரான உடையை அணிந்து கொண்டு வந்துள்ளார் என பேசியிருந்தார்.

கோபம்
இது பெண்ணிவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பெண் என்றும் பாராமல் ஒரு கூட்டத்தில் அவரது உடை குறித்து பேசுவதா என கண்டனங்கள் எழுந்தன. அது போல் நடிகர் சதீஷின் மனைவியாக இருந்தாலும் அவருடைய உடை குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் வசைப்பாடப்பட்டன. பாடகி சின்மயி, பெண்ணின் தனிப்பட்ட உரிமையான அவருடைய உடை குறித்து பெரிய கூட்டத்தில் ஒரு ஆண் கூறுவதா?

எப்போது திருந்துவார்கள்
இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அது போல் பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஒரு வீடியோ தோன்றி விளக்கம் அளித்தார். அதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை விட நான் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளேன்.

உடை அணிதல்
அவர் எப்படி உடை அணிகிறார் என பார்ப்போம் என தர்ஷா குப்தா என்னிடம் கூறினார். ஆனால் சன்னி லியோனோ பட்டுப்புடவையில் வந்திருந்ததை பார்த்த தர்ஷா குப்தா அப்செட்டாகிவிட்டார். உடனே என்னிடம் வந்து நான் எப்படி ஆடை அணிந்திருக்கிறேன், சன்னி எப்படி அணிந்திருக்கிறார் பாருங்கள் என கூறினார். இது நல்ல விஷயம்தான் என்றேன்.

அப்செட்
அதற்கு தர்ஷா குப்தா, நான் அப்செட் ஆன விஷயத்தை மேடையில் நீங்களே கூறிவிடுங்கள் என்றார். அதனால்தான் கூறினேன். மற்றபடி இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சதீஷ் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தை பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் உண்மை தெரியாமல் சதீஷை இப்படி சொல்லிவிட்டோம் என மன்னிப்பும் வருத்தமும் கேட்டனர்.

சின்மயிக்கு போன்
அது போல் சின்மயிக்கு சதீஷே போன் செய்து நடந்தவற்றை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது சின்மயியும் அடடா அவசரப்பட்டுவிட்டோமே என கருதியிருப்பார். இவையெல்லாம் தர்ஷா குப்தா ட்வீட் போடும் வரைக்கும். இது குறித்து நடிகை தர்ஷா குப்தா தனது ட்வீட்டில், என் மீது பழி போடுவது சரியா சதீஷ், மேடையில் உடை குறித்து பேசுங்கள் என நானா உங்களிடம் கேட்டேன்?

மேடையில் அசிங்கமான பேச்சு
இது எனக்கு புதிதாக இருக்கிறது. யாராவது என்ன பத்தி மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? உடை பற்றி பேசியதும் எனக்கும் அன்னிக்கு மனம் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் அதை பெரிசா காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போ நான் சொல்லிதான் சொன்னேன்னு சொல்றது சரியில்லை என தர்ஷா குப்தா தெரிவித்தார்.

அதிர்ச்சி
இதனால் சதீஷின் மன்னிப்பு கேட்டவர்கள், தங்களுக்குள்ளேயே அய்யோ தவறு செய்துவிட்டோமே என நினைத்தவர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தனர். தர்ஷா குப்தாவின் ட்வீட்டுக்கு சின்மயி பதில் அளிக்கையில், இது பயங்கரமானது, யாராவது அவரை மன்னிக்க நினைத்தால் அது தர்ஷா குப்தாதான். பொது வெளிகளில் இது போன்ற கருத்துகளை காமெடி என்ற பெயரில் ஆண்கள் கூறுவது சரியல்ல. தற்போது தர்ஷா தான் தன்னை சொல்ல வைத்தார் என கூறி மீண்டும் மீண்டும் பெண்களை இப்படித்தான் அசிங்கப்படுத்துகிறார்கள் என சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications