• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்

|

சென்னை: "சார்.. மறுபடியும் மரம் நடுவது பற்றி திட்டமிடுங்கள்" என்று ஒரு இளைஞர் கோரிக்கை வைத்ததற்கு, "கண்டிப்பாக தம்பி" என்று முதல்வர் ட்வீட்டில் பதிலளித்துள்ளார்.. அந்த இளைஞர் ஆங்கிலத்தில் வேண்டுகோள் வைத்தால், முதல்வர் தமிழில் பதில் சொல்லி உள்ளார்.

கொரோனா தாண்டவமாடிய சமயம் மக்கள் முகங்களில் அப்படி ஒரு கலவரம் தென்பட்டது.. பீதி சூழ்ந்தது.. அப்போதெல்லாம் தமிழக முதல்வர் அசத்தலான வேலையை பார்த்து நம்பிக்கை தந்து வந்தார்.

நேரடி ஆய்வு, ஆலோசனை கூட்டம், செய்தியாளர் சந்திப்பு என றெக்கை கட்டி பறந்து ஒவ்வொன்றையும் மிக மிக கவனமாக கையாண்டார்.

 அறிவிப்பு

அறிவிப்பு

இதை தவிர, மணிக்கொருதரம் கொரோனாவைரஸ் குறித்த விவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள், அட்வைஸ்களை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டு வந்தார்.. அதுபோலவே தமிழகத்தில் மற்றொரு கலக்கம் பீடித்துள்ளது.. நிவர் புயல் இன்று இரவு வீசப்போவதால், 2 நாட்களுக்கு முன்பிருந்தே அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கிவிட்டார்.. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம்

பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.. இப்போதுகூட செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு நடத்தி வருகிறார். இந்த அளவுக்கு முதல்வர் பிஸியாக இருந்தாலும், ட்விட்டரிலும் மக்களை அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்.. புயல் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ட்வீட்களை பதிவிட்டு கொண்டே வருகிறார்.

கனமழை

கனமழை

"அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய் மற்றும் நீர்வழித்தட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றும், குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது", புயலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த, சென்னை மத்திய பகுதி- 3, வடக்கு - 2, தெற்கு - 1 என மொத்தம் 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்றும் அடுத்தடுத்த பதிவுகளை போடுகிறார்.

ட்வீட்

ட்வீட்

அதுமட்டுமல்ல, பொதுமக்கள் யாராவது புயல் தொடர்பான கேள்வி கேட்டாலும் அதற்கும் பதில் சொல்கிறார்.. ஆலோசனைகள் யாராவது சொன்னால் அதையும் ஏற்று கொண்டு, அவர்களுக்கு பதில் அளிக்கிறார்.. அந்த வகையில், ஒரு இளைஞர், "சார்.. மரம் நடுவதை பற்றி மீண்டும் திட்டமிட வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.. அந்த இளைஞர் ஆங்கிலத்தில் பதிவிட்ட இந்த ட்வீட்டுக்கு கண்டிப்பாக தம்பி என்று தமிழில் பதில் சொல்கிறார் முதல்வர்.

தம்பி

தம்பி

எடப்பாடியார் யாரை பார்த்தாலும் தம்பி என்று உரிமையுடன் கூப்பிட்டே பதில்களை சொல்வது வழக்கம்.. அந்த வகையில், இவருக்கும் பதிலளித்து உள்ளார்.. இத்தனை பிஸியிலும் முதல்வரின் இந்த ட்வீட் செயல்பாடுகள் மக்களை கவர்ந்து வருகிறது. இந்த ட்வீட்டுக்கு பலரும், "ஐயா, அப்படியே அந்த பிஜேபி விட்டு வெளியே வந்து விடுங்கள்! மொத்த தமிழ் மக்களும் உங்களை கொண்டாடுவார்கள்" என்று அடுத்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

 
 
 
English summary
CM Edapadi Palanisamy replied to Netizens demand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X