• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதான் முதல்வர்.. நாளை சசிகலா வருகிறார்.. எடப்பாடியார் என்ன சொல்கிறார் தெரியுமா.. செம தில்..!

|

சென்னை: நாளை சசிகலா சென்னைக்கு வர போகிறார்.. இந்நிலையில் அவரது வருகை சம்பந்தமாக முதல்வர் பேசிய பேச்சு, பெரும் பரபரப்பை அதிமுக வட்டாரத்துக்குள் ஏற்படுத்தி வருகிறது.

சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இதற்கு பிறகு, அவர் சசிகலா பற்றி வெளிப்படையாக யாரிடமும் பேசவே இல்லை.. ஆனால், அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கும்போது மட்டும், தனிப்பட்ட முறையில் அவர்களிடம் மனம் விட்டு பேசியதாக தெரிகிறது.

உழைப்பு

உழைப்பு

"உங்களுக்கு எல்லாம் இந்த 4 வருஷம் சுதந்திரம் தந்திருக்கேன்.. எனக்கு துரோகம் செய்துடாதீங்க.. நம்ம கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பேர் இருக்கு.. வரப்போகிற தேர்தலில் கடுமையாக உழைக்கணும்" என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆலோசனை

ஆலோசனை

இந்நிலையில், நாளை சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில், அவர் வருகைக்கு பிறகு அதிமுகவில் ஒரு சலசலப்பு ஏற்படும் என்று தெரிந்த நிலையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களிடம், மாவட்ட செயலாளர்களிடமும் அது குறித்து பேசியுள்ளார். கட்சி ஆபீசில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள், பிரதமர் வருகை உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

 ஒற்றுமை

ஒற்றுமை

பிறகு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பேசும்போது, "கட்சியில் இப்போது நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். புரட்சி தலைவர் தொடங்கிய கட்சி இது... அவர் தொடங்கிய காலத்திலும் சரி, தொடர்ந்து அம்மா வழியில் ஆட்சியை நடத்தியபோதும் சரி, அனைவரும் ஒற்றுமையாக இருந்து உள்ளோம்... இடையில், நம்மால் விலக்கப்பட்ட டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து இப்போது கட்சிக்கு கெடுதல் நினைத்துக்கொண்டு இருக்கிறார். அதனால், எந்தவித வேற்றுமைக்கும் இடம் கொடுக்கக்கூடாது.

 தனிக்கட்சி

தனிக்கட்சி

தனிக்கட்சியை தொடங்கி விட்டு, இப்போது நமது கட்சி கொடியை கார்களில் பறக்க விட்டுக்கொண்டு ஏதோ நமது கட்சிக்காரர்கள் நிறைய பேர் அங்கு இருப்பது போன்று மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்" என்றனர்.. முதல்வரும், துணை முதல்வரும் இப்படி பேசியபோது சசிகலா என்ற பெயரை எங்குமே பயன்படுத்தவில்லை. ஆனால், மதுசூதனன், கேபி முனுசாமி ஆகியோர் மட்டும், "சசிகலாவையும், அவரது குடும்பத்தையும் ஒருபோதும் கட்சியில் சேர்க்க மாட்டோம்" என்று ஆவேசமாக சொன்னார்கள்.

 சசிகலா

சசிகலா

இதற்கு பிறகு தனிப்பட்ட முறையில், முதல்வரும், துணை முதல்வரும் அமைச்சர்கள், மா.செ.க்களிடம் பேசும்போது, "சசிகலா குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்... அவர்கள் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் வேண்டாம். அதை, நாங்களே பார்த்துக்கறோம்... நீங்கள் யாரும் கவலைப்படாமல், தேர்தல் வேலைகளை கவனியுங்கள்.. அடுத்த ஆட்சியும் நாமதான்.. சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை.. தேர்தலை ஒட்டி, அரசின் சாதனைகளை பிட் நோட்டீஸ் அச்சிட்டு, வீடுதோறும் தர வேண்டும்.. நம் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்றார்களாம்.

மலைப்பு

மலைப்பு

அன்று டெல்லியில் எடப்பாடியார் என்ன நிலைப்பாட்டில் இருந்தாரோ, அதில்தான் தற்போதும் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகி உள்ளது.. 50 எம்எல்ஏக்கள் உட்பட, அமைச்சர்கள் பலரும் சசிகலாவுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆதரவு போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வரும்நிலையில், முதல்வரின் இந்த துணிச்சலும், தன்னம்பிக்கையும் மக்களுக்கு மலைப்பை தந்து வருகிறது..!

 
 
 
English summary
CM Edapadi Palanisamy says about Sasikalas entry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X