முதல்வரின் "அந்த" அறிவிப்பு.. மிரண்டு கிடக்கும் திமுக, அதிமுக.. நாளைக்கும் சர்ப்ரைஸ்?!
சென்னை: முதல்வர் சொன்ன அந்த சூப்பர் அறிவிப்பின் சலசலப்பும், பதைபதைப்பும் இன்னும் அரசியல் களத்தில் அடங்கவில்லையாம்.. அதே பேச்சாக இப்போது வரை நீடித்து வருகிறதாம்.
கடந்த வாரம் 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் விவசாய லோனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்திருந்தார் இல்லையா.. அப்படி ஒரு விஷயம் பற்றி முன்னதாகவே யாருக்குமே அந்த அறிவிப்பு பற்றி சொல்லாமல் வைத்திருந்தாராம் முதல்வர்.
திடுதிப்பென்று அன்றைய தினம், அவையில் அறிவிக்கும்போதுதான் அதிமுக தரப்புக்கே தெரிந்திருக்கிறது.. துணை முதல்வர், சக அமைச்சர்களுக்கு கூட தெரியாதாம்.

ஆசீர்வாதம்
இதில் அவர்களுக்கு வருத்தம் ஓரளவு இருந்தாலும், இந்த அறிவிப்பு என்பது மிகப்பெரிய விஷயம்.. அதிமுகவுக்கே பெருமை சேர்க்ககூடியது.. திமுகவுக்கு சறுக்கலை தருவது, அதனால்தான், எல்லா எம்எல்ஏக்களும் ஓடிவந்து முதல்வருக்கு லைனில் நின்று வாழ்த்து சொன்னார்கள்.. ஒருசில எம்எல்ஏக்கள் எடப்பாடியாரின் காலிலேயே விழுந்து பாராட்டினார்களாம்.

பேரவை கடைசி
அதிமுகவில் இப்படி என்றால், திமுக நிலைமை இன்னும் பரிதாபம்.. அன்றைய பேரவை கடைசி நாள் வேறு.. வெளிநடப்பில் திமுக இருந்துள்ளது.. சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இல்லாத நேரத்தில் விவசாயிகளின்,தள்ளுபடி செய்து, முதல்வர் அறிவித்ததும், திமுகவுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. இந்த நேரத்தில் மட்டும் அவையில் இல்லாமல் போய்விட்டோமே.. இருந்திருந்தால், அந்த அறிவிப்புக்கு காரணமே திமுகதான் என்பதை பகிரங்கமாக பேரவையில் சொல்லி பெயர் வாங்கி இருக்கலாமே என்று முணுமுணுத்து கொண்டதாம்.

அறிவிப்பு
இப்போது என்ன விஷயம் என்றால், அந்த விவசாய கடன் தள்ளுபடி என்பது 110 விதியின்கீழ்தான் முதல்வர் அறிவித்தார்.. நாளைக்கும் தமிழக அரசு சார்பில், பேரவை நடக்க போகிறது.. இம்மாதம் கடைசி வாரத்தில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது...

சீக்ரெட்
சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெற போகின்றன.. அந்த அறிவிப்புகள் எப்படி இருக்க போகிறது? இதுலயும் முதல்வர் ஏதாவது சீக்ரெட் அறிவிப்புகள் வைத்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.. அது என்னவா இருக்கும்? எப்படிப்பட்ட அறிவிப்பாக இருக்கும் என்பது திமுக மட்டுமல்ல, அதிமுகவின் மொத்த எதிர்பார்ப்பாகவும் கிளம்பி இருக்கிறதாம்..!