ஸ்டாலின் அடித்த சிக்சர்.. கொளத்தூருக்கே ஜாக்பாட்! கலர் கலராய் ஜொலிக்குது சிவசக்தி நகர்! சூப்பர்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், 53 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்துள்ளார்.
கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தினை சார்ந்து வாழ்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 26.06.2021 அன்று கொளத்தூரில் வண்ண மீன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசித்து, வண்ண மீன் வர்த்தகத்தினை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவும், சந்தைப்படுத்துதலுக்கான தேவைகள் குறித்தும் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் முக ஸ்டாலின்
அதனடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தினை பெரிய அளவில் மேம்படுத்திடவும், கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தினை உலக அளவில் கொண்டு சென்றிடவும், தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில் 53 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் (G+2) மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டு வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.'
வண்ண மீன் வர்த்தகம்
மேலும், வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வண்ண மீன் வர்த்தக மைய கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டது. வண்ண மீன் வர்த்தக மையத்தின் தரைத் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 48 கடைகள், 30 சதுர மீட்டர் பரப்பளவில் 5 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 11 கடைகள், என மொத்தம் 64 கடைகளும், 150 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு அலுவலகம், 2 உருளை வடிவ மீன்காட்சியகம், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மீன் ஏற்றுமதி மையம்
முதல் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 58 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 12 கடைகள் என மொத்தம் 70 கடைகளும், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இரண்டாம் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 46 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 8 கடைகள், என மொத்தம் 54 கடைகளும், 325 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு உணவகம், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மீன் வர்த்தக மையம்
இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில் 3 மின்தூக்கிகள், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ் நிலை நீர்தேக்க தொட்டி, 45,000 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 200 இரண்டு சக்கர வாகனங்களும், 188 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில், மொத்த மற்றும் சில்லறை வண்ண மீன்கள் விற்பனை செய்வதற்காக 185 கடைகள், ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், பார்வையாளர் அரங்கம் ஆகிய வசதிகளுடன் வண்ண மீன் உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகியோருக்கான சந்திப்பு மையமாக கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications