சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வானிலை மையம்.. முதல்நாள் விமர்சனம்.. மறுநாளே அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும், உரிய நேரத்தில் வேகமாக கணிப்புகளை வெளியிட முடியாத நிலை உள்ளதால் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில்
கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று முதல்நாள் கணிப்புகளை மிஞ்சி மிக கனமழை பெய்தது. 200மிமீ அளவிற்கு மழை பெய்தும் வானிலை மையத்தால் அதை முன்கூட்டியே அறிவிக்க முடியவில்லை. வானிலை மையம் முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்காதது குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலினும் இது தொடர்பாக விமர்சனம் செய்து இருந்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், வானிலை மையத்திடம் இருந்து எப்போதும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்களே ஏமாந்து விட்டனர்.

திராவிட இயக்க தமிழர் பேரவையில் நாளை இணைகிறது தமிழ்நாடு திராவிடர் கழகம்!.. காரணம் என்ன தெரியுமா? திராவிட இயக்க தமிழர் பேரவையில் நாளை இணைகிறது தமிழ்நாடு திராவிடர் கழகம்!.. காரணம் என்ன தெரியுமா?

வருத்தம்

வருத்தம்

அதற்கு வானிலை மையத்தினர் வருத்தம் கூட தெரிவித்து உள்ளனர். திடீரென மழையை கணிக்கும் வகையில் வானிலை மையம்தான் கருவிகளை வாங்க வேண்டும். அது அவர்கள் செய்ய வேண்டிய வேலை. மத்திய அரசிடம் இதை பற்றி பேசுவோம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் கடிதம்

முதல்வர் கடிதம்

அதில், பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.

 சென்னை வானிலை

சென்னை வானிலை

வழங்க இயலாதநிலை உள்ளதை காண்கிறோம். உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து அதே சமயம் இடியுடன் கூடிய இலேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் "ஆரஞ்ச் அலர்ட்" வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது.

அமித் ஷா

அமித் ஷா

மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற "ரெட் அலர்ட்" சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
CM M K Stalin sends letter to Union Minister Amit Shah to upgrade Chennai Weather Department performances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X