சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரிதமான பணி.. நிறைவேறிய வாக்குறுதி.. மெரினாவில் ரெடியான மாற்றுத்திறனாளிகள் பாதை.. ஸ்டாலின் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உலக அளவில் பல பிரபலமான பீச்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதாவது மாற்று திறனாளிகள் பீச் மணலில் செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

கடலில் சென்று கால் நினைக்கும் வகையில், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையிலும் இதேபோல் மாற்றுத்திறனாளிக்கான பாதைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்.. பெரம்பலூரில் இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை! கலெக்டர் உத்தரவுமுதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்.. பெரம்பலூரில் இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை! கலெக்டர் உத்தரவு

மெரினா

மெரினா

அதன்படியே சென்னை மெரினாவில் வருடம் இறுதியில் சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வார இறுதி நாட்களில் மட்டும் இந்த சாய்தள பாதைகள் தற்காலிகமாக அமைக்கப்படும். இவை எல்லாம் தற்காலிக பாதைகள்தான். வார இறுதி முடிந்த பின் இந்த பாதைகள் நீக்கப்படும். அப்போதில் இருந்தே இந்த பாதைகள் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களுக்கு நிரந்தர பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

பாதை

பாதை

இந்த முறை இந்த பாதைகள் அமைக்கப்பட்ட பின் அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்தது. ஆயிரக்கணக்கில் மாற்று திறனாளிகள் வந்து இங்கு பார்வையிட்டு சென்றனர். ஆர்வமாக கடலில் கால் நனைத்து இவர்கள் உற்சாகமாக இருந்த போட்டோக்கள் வெளியே வந்தன. இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி கவனம் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்ட இந்த பாதைகள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இது தற்காலிக பாதை என்பதால் அதன்பின் நீக்கப்பட்டது.

சாலை நிரந்தரம்

சாலை நிரந்தரம்

இதை நிரந்தரமாக வேண்டும் என்று மக்கள் பலரும் தீவிரமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து உடனே இதை நிரந்தரமாக்க.உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது. மொத்தம் 200 மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை நிரந்தரமாக அமைக்க பணிகள் நடந்தது. கடந்த முறை தற்காலிகமாக geosynthetic மெட்டீரியல் மூலம் இந்த பாதை அமைக்கப்பட்டது. ஈரத்தில் இந்த பாதை வீணாகாது என்பதால் இப்படி அமைக்கப்பட்டது.ஆனால் ஈராமாக இருக்கும் போது இதில் வீல் சேர் ஓட்ட முடியாது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இதனால் geosynthetic மெட்டீரியலுக்கு பதிலாக வேறு வகையான மர பாதை அமைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர் . இந்த geosynthetic மெட்டீரியல் பாதை அமைக்க 30 லட்சம் மட்டுமே செலவாகும். ஆனால் மர பாதை அமைக்க 2.5 கோடி ரூபாய் செலவு ஆகும். இருந்தாலும் மரப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இதில் 15 லட்சம் ரூபாயை அரசுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கான பணிகள் முடிந்து இன்று மாலை திறக்கப்பட உளது.

 சாதனை

சாதனை

முன்னதாக, எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது மெரினாவில் அவ்வப்போது தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த பாதை விரைவில் நிரந்தரம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அந்த பாதையை திறந்து வைத்தார்.

English summary
CM M K Stalin to open the path for differently abled in Marina today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X