சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்செட் ஆன ஸ்டாலின்.. "அமைச்சரே.. ஏமாற்றமளிக்கிறது".. வேதனையுடன் போட்ட ட்வீட்.. தவிக்கும் ராமேஸ்வரம்

முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ராமேஸ்வரம் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் என தொடர்ந்து அட்டூழியங்களை நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் எதிர்காலத்தையே அவர்கள் கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.

இப்படித்தான், ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடந்த டிசம்பர் 19 ம் தேதி மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. 537 படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றுள்ளனர்.

கேரளாவில நாளை ஜன.14-ல் பொங்கல் விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு கேரளாவில நாளை ஜன.14-ல் பொங்கல் விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு

 சிறைபிடிப்பு

சிறைபிடிப்பு

மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை சிறைபிடித்து கைது செய்துள்ளனர்... அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் ஜெயிலில் அடைத்து வைத்துள்ளது..

 மீனவர்கள்

மீனவர்கள்

இவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால், மேலும் 12 மீனவர்களை கைது செய்து அட்டூழியத்தில் இலங்கை கடற்படை ஈடுபட்டது.. சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஏற்கனவே 2 முறை கடிதங்கள் எழுதினார்...

Recommended Video

    சும்மா வாய் வார்த்தை பேசு மாட்டேன்.. 8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின் - வீடியோ!
     மீனவர்கள்

    மீனவர்கள்

    இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருந்த நிலையில், 43 தமிழக மீனவர்கள் டிசம்பர் 31ம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. அவர்களை ஜனவரி 13ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுவிட்டார்.. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது... அப்போதும் மீனவர்களை கோர்ட் விடுவிக்கவில்லை.. மாறாக, ஜனவரி 27வரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.. இதனால் ராமேஸ்வரமே அதிர்ந்து போயுள்ளது..

     ட்வீட்

    ட்வீட்

    இப்படிப்பட்ட சூழலில்தான் முதல்வர் ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அந்த ட்விட்டை அமைச்சர் ஜெய்சங்கருக்கே டேக் செய்துள்ளார்.. அதில், இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் தருகிறது.. அவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்... நாளை பொங்கல் பண்டிகை என்பதால், 43 மீனவர்களையும் காணாமல் ராமேஸ்வரமே சோகத்தில் மூழ்கி கிடக்கிறது..!

    English summary
    CM MK Stalin disappointed to remand of Rameshwaram 43 fishermens extension of custody
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X