சாதித்த திமுக.. மயிலாப்பூர் கோயிலில் ஸ்டாலின்.. 51 வருடங்களுக்கு பிறகு.. ஈடேறிய "அர்ச்சகர்" கனவு
அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்குகிறார்
சென்னை: தமிழக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர்.... அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்... இது திமுக அரசின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியர்கள் எல்லாருமே சமம் என்றாலும், பல்வேறு தொழில்களில் பொத்தாம் பொதுவாக எல்லாருமே ஈடுபடாமல், தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது..!
அதிலும் நம் நாட்டில், மதங்கள் பல இருந்தாலும், அதன் மத குருமார்கள் எப்போதும் குறிப்பிட்ட சமூகத்தினராகவோ ஆண்களாகவோ மட்டுமே இருப்பதே நடைமுறையாக இருக்கிறது..

இந்து மதம்
இதில் இந்து மதமும் விதிவிலக்கல்ல... அந்த வகையில், தமிழகத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்திலும் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை சார்ந்த ஆண்களே அர்ச்சகராக இருந்து வரும் நிலையும் தொடர்கிறது.. இந்த போக்கை எதிர்த்து அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற குரல்கள் பல காலமாக எழுந்து வந்தன.

இடையூறுகள்
தந்தை பெரியார் வழி நின்று,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார்... ஆனால் அதற்கு ஏகப்பட்ட இடையூறுகள் அந்த சமயத்தில் நடந்தன.. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு சென்றது.. இதனால் இந்த திட்டத்தை அமலாக்குவதில் சிக்கலும் ஏற்பட்டது.. இறுதியில், இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித்தது.

வலியுறுத்தல்
இதனிடையே, அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற சமூக இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோயில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படாத நிலைமையும் தொடர்ந்து வந்தது.. மாணவர்கள் தங்களை பணியமர்த்தக்கோரி பல போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.. கடந்த அதிமுக ஆட்சி காலத்திலும், இதே கோரிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் விடாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தார்.

அறிக்கை
"அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் பணி நியமனம்" என்று திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.. வழக்கமாக எல்லா கட்சிகளும் வெறும் அறிக்கையோடு தங்கள் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறுத்தி கொள்ளும்.. ஆனால் திமுக அவ்வாறு நிறுத்திவிடாமல், திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் உட்கார்ந்தும்கூட கருணாநிதி சொன்ன அதே விஷயத்தை நடைமுறைப்படுத்த முயன்றது..

சேகர்பாபு
கடந்த ஜுன் 7 ஆம் தேதி "100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வேலைகள் செயல்படுத்தப்படும்" என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் சொன்னதுமே அதற்கான அறிகுறி பளிச்சென தெரிய ஆரம்பித்தது.. இதுபெரும்பாலானோரிடம் வரவேற்பை பெற்றாலும், வழக்கம்போல இதற்கும் குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.. சிலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.

அர்ச்சகர்
இதற்கு அடுத்தபடியாக, அதாவது ஜுன் 12-ம் தேதியே, பெண்கள் யார் விரும்பினாலும் முறையான பயிற்சிப் பெற்று அவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சேகர்பாபு சொன்னதும், கூடுதல் வரவேற்பை சேர்த்து பெற்றது இந்த அறிவிப்பு.. ஏனெனில், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று அரசினை வலியுறுத்தி வந்த பலரும் ஆண் அர்ச்சகர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு வந்தனரே தவிர, பெண் அர்ச்சகர்கள் பற்றி அவ்வளவாக குரல் எழுப்பப்படவில்லை.. இத்தனைக்கும் இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாக கூடாது என்று எங்குமே சொல்லப்படவுமில்லை..

அறிவிப்பு
வேத காலம் தொட்டு இப்போதுவரை ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேதம் பயின்றுள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.. அந்த வகையில் திமுக அரசின் அறிவிப்புகள் முக்கிய கவனத்தை ஈர்த்தன. கருணாநிதி வழி நின்று, அவரது விருப்பத்தை இன்று ஸ்டாலின் பூரணமாக நிறைவேற்றி உள்ளார்.. தமிழக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர்....

அர்ச்சகர்
அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்... இது திமுக அரசின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை மயிலாப்பூர் கோயிலில் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணையை ஸ்டாலின் வழங்கினார்.

பூர்த்தி
ஆக, தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்து காட்டி உள்ளார் ஸ்டாலின்.. தந்தை செயல்படுத்த துடித்த திட்டத்தையும் இன்று பூர்த்தி செய்துள்ளார்.. பெரியார், அண்ணா, கனவை நிறைவேற்றி உள்ளார்.. அத்துடன் "சமத்துவம்" என்பது சாதி, மத, பாலினங்களை கடந்த மனிதம் மட்டுமே என்பதையும் வலிய நிரூபித்துள்ளார் கருணாநிதி மகன் முக ஸ்டாலின்...!
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications