ஸ்குவாஷில் “மாஸ்” காட்டிய தமிழ்நாடு.. மேலும் 3 விளையாட்டு தொடர்களா? ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் ஒலிம்பியாட் மற்றும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து மேலும் 3 விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையில், அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர்.

அப்போது பேசிய அவர், "ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக் நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. செல் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு பன்னாட்டு விளையாட்டுகள் மற்றும் போட்டிகளுக்கான விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

 CM MK Stalin said another 3 sports series to be held in Tamilnadu

ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பையும், மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக்கையும் நம் மாநிலம் நடத்தவுள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023, நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இந்தப் போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்னைகள் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன வசதிகளை உருவாக்கி வருகிறது. ஒரு விளையாட்டு வீரர், தனது திறமையைக் காட்டி வெற்றி பெற எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் என்கிற அறக்கட்டளையை சமீபத்தில் தொடங்கினோம்.

ஸ்குவாஷ் உலகக்கோப்பை - 2023 போட்டியை சென்னையில் நடத்துவதற்கு இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் எடுத்த முயற்சிகளை மீண்டும் பாராட்டுகிறேன். குறிப்பாக, சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளத்தின் தலைவர் ஜீனா உட்ரிட்ஜுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் என்.ராமச்சந்திரன் நமது மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றுகிறார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்திருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போட்டிகளில் வெற்றி வாகை சூடிய வீரர். வீராங்கனைகளுக்கும், விளையாட்டு மேலாளர்கள் மற்றும் அரசு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிகாரிகளுக்கும் எனது

விளையாட்டு வீரர்களே, வீராங்கனைகளே! வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு விளையாடுங்கள்! நீங்கள் அடையும் வெற்றி என்பது நீங்கள் பிறந்த நாடு அடையும் வெற்றி! நீங்கள் சார்ந்த நாடு அடையும் வெற்றி! எனவே, உங்களது கடமையும் பெரிது, பொறுப்பும் பெரிது. உங்களது திறமையும் பெரிது." என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+