விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதல்வர் பழனிச்சாமி ட்வீட்
விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத் துடிப்பை சீராக்க எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவேக்கின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். விவேக்கின் இதயத்தில் 100 சதவிகித அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நல்லெண்ணத்தில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். விவேக் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் விரைவில் குணமடையவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவேக் விரைவில் குணமடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் விவேக் விரைவில் மீண்டு வரவேண்டுமென பதிவிட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications