சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில் பயணத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின்! சென்னை டூ காட்பாடி! 2 மணி நேரம் நடந்த டிஸ்கஷன்!

ரயில் பயணத்தின் போது கூட ஓய்வெடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலிருந்து வேலூருக்கு சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயண நேரத்திலும் ஓய்வின்றி ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரிடம் டிஸ்கஷன் செய்தவாறே பயணித்தார்.

மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இன்னைக்கு ஒரு புடி! சூப் -பிரியாணி- சாலட்! தூய்மை பணியாளருடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்! இன்னைக்கு ஒரு புடி! சூப் -பிரியாணி- சாலட்! தூய்மை பணியாளருடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்!

கள ஆய்வில் முதலமைச்சர்

கள ஆய்வில் முதலமைச்சர்

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை இன்று வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் 2 நாட்கள் வேலூரில் தங்கி மண்டல அளவினான ஆய்வுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை சீரடி எக்ஸ்பிரஸில் பயணித்த முதல்வர் ஸ்டாலின், பயண நேரமான 2 மணி நேரமும் முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு அது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.

ஓய்வுவுக்கு இடமில்லை

ஓய்வுவுக்கு இடமில்லை

ரயில் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் செய்துகொண்டே பயணித்திருக்கிறார். அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

பெரிய டீம்

பெரிய டீம்

முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் முதல்வருடன் இந்த பயணத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். கோப்புக்களை மட்டும் வைத்துக் கொண்டே இவ்வளவு கேள்விகள் கேட்ட முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வின் போது இன்னும் என்னென்ன வினாக்களை முன் வைப்பாரோ என வேலூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஸ்டாலின் பதிவு

ஸ்டாலின் பதிவு

தனது ரயில் பயணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ''கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதிசெய்யும் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தினைச் செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன். தொடர்வண்டியிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து, பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது!'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

English summary
Chief Minister Stalin, who traveled from Chennai to Vellore by Sirdi Express train, held an inspection meeting without rest during the journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X