84வது பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாஸ்! முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், அண்ணாமலை, சீமான் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாம் தமிழர் கட்சி சீமான், பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1939ஆம் ஆண்டு பிறந்தார். இன்று (ஜூலை 25) தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பாமக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழகம் மட்டுல்மல்லது தேசிய கட்சிகளின் அரசியல் சுட்சித் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்." என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மருத்துவர் அய்யா.திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெரியவர் மருத்துவர் அய்யா.ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், *பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ஐயா அவர்களின் 84வது பிறந்ததினமான இன்று அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜக சார்பாக வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Dr.Ramadoss Birthday | தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியா பாமக ? *Politics
    நாம் தமிழர் கட்சி சீமான்

    நாம் தமிழர் கட்சி சீமான்

    இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருபவர், சமரசமின்றி சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் போராளி! எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ‘தமிழ்க்குடிதாங்கி' எங்கள் ஐயா மருத்துவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும், தமிழர்க்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழும், உங்கள் அன்புப்பிள்ளை, சீமான்" என கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+